திருப்புறம்பயம் திருக்கோயில் தல வரலாறு
Sthala puranam of Thiruppurambayam Temple


இறைவர் திருப்பெயர்	: சாட்சி நாதேஸ்வரர், புன்னைவன நாதர்
இறைவியார் திருப்பெயர்	: கரும்படுசொல்லம்மை, இட்சுவாணி
தல மரம்		: புன்னை
தீர்த்தம்         : பிரம தீர்த்தம், சப்த சாகர தீர்த்தம், மண்ணியாறு, கொள்ளிடம்
வழிபட்டோர்		: அகத்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விஸ்வாமித்ரர்
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர்	- மறம்பய மலைந்தவர். 
			 2. அப்பர்	- கொடிமாட நீடெருவு. 
			 3. சுந்தரர்	- அங்கம் ஓதியோர்

gOpuram


தல வரலாறு

 • பிரளய காலத்தில், வெள்ளம் ஊரினுள் புகாதவாறு தடைப்பட்டு, புறத்தே நின்றமையால், இப்பெயர் பெற்றது. இத்தல விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் எனப்படுகிறார்.

 • ஒரு வணிகப் பெண்ணிற்காக, இவ்வூர் இறைவன் மதுரை சென்று, சாட்சி கூறினமையால், சாட்சி நாதர் எனப் பெற்றார். வன்னி மரம், கிணறு, மடைப்பள்ளி (மதுரையிலுள்ளது.)

 • சனகர் முதலிய நால்வருக்கு இறைவன், இத்தலத்தில் அறத்தை உணர்த்தினார்.

thirupurambayam temple

சிறப்புகள்

 • இத்தல விநாயகர் (பிரளயங்காத்த விநாயகர்) சிப்பி, சங்குகளால் ஆக்கப்பெற்றவர். ஆண்டுதோறும், ஆவணி மாதத்துச் சதுர்த்தியில் ஒரு ஆடம் தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. அவ்வளவு தேனும் அவர் திருமேனியில் சுவறி விடுகிறது.

 • இக் கோவில் பணிமகள் ஒருவரைக் கொன்று, அவ்வம்மையாருடைய அணிகலன்களை திருடிய ஒடம் விடுபவன், தானும் ஆற்றைக் கடப்பதற்குள், ஆற்றில் தவறி விழுந்து இறந்தான். இச்செய்தியைச் சுந்தரர், தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

 • இக்கோவில் மதுரை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது.

 • சோழர் கால கல்வெட்டுகள் 11 படி எடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, கும்பகோணத்திற்கு வடமேற்கே 9-கி.மீ.தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.

தொடர்பு :

 • 0435 - 2459519, 09444626632.

< PREV <
காவிரி வடகரை 45வது
தலம் இன்னம்பர்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 47வது
தலம் திருவிசயமங்கை