|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருப்பூந்துருத்தி
இறைவர் திருப்பெயர் : புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்.
இறைவியார் திருப்பெயர் : சௌந்தரநாயகி.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்.
வழிபட்டோர் : இந்திரன், திருமால், இலக்குமி, சூரியன், காசிபர் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : அப்பர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று.
- "பூந்துருத்தி காடவநம்பி "யின் அவதாரத் தலம்.
- இத்தலத்திலும் நந்தி விலகியுள்ளது. (தலபுராணம் தொடர்புடையது.)
- ஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான் தன் தோளிற் சுமந்தத் தலம். இவ்விடம் சம்பந்தர் மேடு என்று சொல்லப்படுகிறது. (திருவாம்பொழிலுக்குப் பக்கத்தில்
வெள்ளாம்பரப்பூரையடுத்து இம் மேடு உள்ளது. இங்கு இருவருக்கும் கோயில் உள்ளது; விழா நடைபெறுகிறது.)
- அப்பர் அமைத்த - "திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்" என்று புகழப்படும் திருமடம் உள்ள தலம். இங்கு இருந்து தான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை உள்ளிட்ட பல
தாண்டகங்களையும் பல பதிகங்களையும் பாடியருளினார்.
- கருவறையின் தென்பால் தென்கயிலையும், வடபால் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன.
- மகிடனையழித்த பாவத்தைப் போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமானும், பூந்துருத்தி காடவ நம்பியின் திருவுருவமும்
தரிசிக்கச் சிறப்புடையன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருக்கண்டியூரிலிருந்து 3 கி. மீ. தொலைவில், திருக்காட்டுப்பள்ளிச் சாலையில் உள்ள தலம். திருவையாற்றிலிருந்தும் செல்லலாம்.
|