திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)

இறைவர் திருப்பெயர்	: வைத்திய நாதர்
இறைவியார் திருப்பெயர்	: தையல்நாயகி
முருகன்			: செல்வமுத்துக்குமாரர்
தல மரம்		: வேம்பு
தீர்த்தம்			: சித்தாமிர்த குளம்
வழிபட்டோர்		: முருகர், சூரியன், ரிக் வேதம், அங்காரகன்(செவ்வாய்), இராமர், 
			 இலட்சுமணன், அநுமான், ஜடாயு, சம்பாதி, பிரம்மன், சரஸ்வதி, 
			 லட்சுமி, துர்கை , பரசர், துருவாசர், சிவசன்மன் முதலியோர். 

தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் - கள்ளார்ந்த பூங்கொன்றை, 
			 2. அப்பர் - 1. வெள்ளெருக்கரவம் விரவுஞ், 2. ஆண்டானை அடியேனை

பிற பாடல்கள்		: அருணகிநாதர் அருளிய 14 திருப்புகழ் பாடல்களும், குமரகுருபரர், 
			 படிக்காசுத்தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப் புலவர், 
			 இராமலிங்க சுவாமிகள், தலபுராணம் இயற்றிய வடுகநாத தேசிகர் 
			 மற்றும் தருமையாதீனம் 10வது சந்நிதானம் இயற்றிய 
			 முத்துக்குமாரசாமி திருவருட்பா என்னும் நூல்களும், 
			 மூவர் அம்மானை முதலான இத்தலத்திற்கு உரியனவாகும்.  
thirupullirukkuvelur temple
தல வரலாறு

 • தற்பொழுது இத்தலம் வைதீஸ்வரன் கோவில் என்று வழங்குகின்றது.

 • இத்தலத்தை புள் (ஜடாயு, சம்பாதி), ரிக்வேதம் (இருக்கு), வேள் (முருகன்), ஊர் (சூரியன்) வழிபட்டதால் இப்பெயர் பெற்றது.

 • இறைவன் மருத்துவராய் (வைத்தியநாதர்) இருந்து அருள்பாலிக்கும் தலம்.

 • முருகப் பெருமான், செல்வ முத்துக் குமாரசுவாமி என்னும் நாமத்துடன், அருள்கின்ற தலம்.

சிறப்புக்கள்

 • இத்தல இறைவனை வணங்குவோர் அங்காரக தோஷம் நீங்கப்பெறுவர்.

 • இத்தலத் தீர்த்தமான சித்தாமிர்தகுளம் நோய் நீக்கும் ஆற்றல் உடையது.

 • நேத்திரப்பிடி சந்தனம், திருச்சாந்துருண்டை பிரசாதம் தருகிறார்கள். இதனை உண்பதால் எல்லாவிதமான நோய்களும் நீங்கும்.

 • பிறவிப்பிணி வைத்தியராகிய வைத்தியநாதப்பெருமான், தையல் நாயகி திருக்கரத்தில் தைலபாத்திரமும், அமிர்தசஞ்சீவியும், வில்வத்தடி மண்ணும் எடுத்துக்கொண்டு உடன் 4448 வியாதிகளையும் தீர்க்கின்ற இடம்.

 • தருமை ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்டது.

View gOpurAs with holy pond of thirupullirukkuvelur temple

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, சிதம்பரம் - மயிலாடுதுறை இரயில் பாதையில் உள்ள நிலையம். இரயில் நிலையத்திலிருந்து 1கி.மீ. தூரத்தில் கோவில் உள்ளது. சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை ஆகிய இடங்களிருந்து பேருந்து வசதி உள்ளது.

< PREV <
காவிரி வடகரை 15வது
தலம் திருக்கோலக்கா
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 17வது
தலம் திருக்கண்ணார் கோவில்
(குறுமாணக்குடி)