பேரெயில் (ஓகைப்பேரையூர் - வங்காரப்பேரையூர்) கோயில் தலவரலாறு
Sthala puranam of Thiruppereyil Temple


இறைவர் திருப்பெயர்		: ஜகதீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: ஜகந்நாயகி.
தல மரம்			: நாரத்தை
தீர்த்தம்				: அக்னி தீர்த்தம்
வழிபட்டோர்			: 
தேவாரப் பாடல்கள்		: அப்பர் - மறையு மோதுவர் மான்மறிக்.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
தல வரலாறு

  • பேரையூர் என்ற பெயரில் பல ஊர்களிருப்பதால் மக்கள் இப்பதியை ஓகைப்பேரையூர் என்று வழங்குகின்றனர். வங்காரப்பேரையூர் என்ற பெயரும் வழங்குகிறது.

சிறப்புகள்

  • சோழ நாட்டின் தலைநகராகத் திருவாரூர் விளங்கியபோது அதைச் சார்ந்த கோட்டை இருந்தது என்றும்; அக்கோட்டையின் அருகே எழுந்த ஊர் 'பேரெயிலூர் ' என்று பெயர் பெற்றதென்றும் அப்பெயரே மருவி "பேரையூர் " என்றாயிற்று என்பது ஆய்வாளர் கருத்து.

  • இவ்வூரில் தோன்றிய பெண் புலவர் ஒருவர் - பேரெயில் முறுவலார் - பாடிய பாடல்கள் குறுந்தொகையிலும், புறநாநூற்றிலும் உள்ளன.

Sri Jagathishwarar temple, Thiruppereyil.

The holy pond of Sri Jagathishwarar temple, Thiruppereyil.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - மன்னார்குடிச் சாலையில் கமலாபுரம் அடுத்த மூலங்குடி வந்து அங்கிருந்து இத்தலத்தையடையலாம். மாவூர்ரோடு - வடபாதி மங்கலம் சாலை வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்.

< PREV <
காவிரி தென்கரை 113வது
தலம் திருக்கொள்ளம்புதூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 115வது
தலம் திருக்கொள்ளிக்காடு