பேணுபெருந்துறை (திருப்பந்துறை)

இறைவர் திருப்பெயர்		: சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: மங்களாம்பிகை, மலையரசி.
தல மரம்			: வன்னி.
தீர்த்தம்				: மங்கள தீர்த்தம்.
வழிபட்டோர்			: பிரமன், உமாதேவி, முருகன் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - பைம்மா நாகம் பன்மலர்க்.

தல வரலாறு :

  • அரிசிலாற்றின் கரையிலுள்ள இவ்வூர், 'திருப்பெருந்துறை'யினின்றும் வேறுபாடறிய 'பேணு' என்னும் அடைமொழிசேர்த்து 'பேணு பெருந்துறை' என்று வழங்கப்படுகிறது.

  • பிரமன், உமாதேவி, முருகன் ஆகியோர் வழிபட்டு சிறப்புற்றுள்ளனர்.

சிறப்புகள்

  • செங்கற் கோயிலாக இருந்த இக்கோயில் கரிகாற்சோழன் காலத்தில் கற்கோயிலாயிற்று என்றொரு கல்வெட்டு தெரிவிக்கின்றது.

  • சுவாமிப் புறப்பாட்டிற்கு ஒரு மாது நிலமளித்த நிவந்தமும் கல்வெட்டால் தெரியவருகின்றது.

  • கல்வெட்டில் சுவாமி "பேணு பெருந்துறை மகாதேவர் " என்றும் அம்பிகை "மலையரசியம்மை" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

appearance of the temple

அமைவிடம்

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - காரைக்கால் பேருந்துப் பாதையில் அமைந்துள்ள தலம். (நாச்சியார் கோயிலையடுத்து எரவாஞ்சேரி பாதையில் 1 கி. மீ. தொலைவில் உள்ளது) கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

< PREV <
காவிரி தென்கரை 63வது
தலம் திருக்கருவிலிக்கொட்டிட்டை
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 65வது
தலம் திருநறையூர்ச்சித்தீச்சரம்