பழமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)

இறைவர் திருப்பெயர்		: நீலகண்டேஸ்வரர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், 
				  மகதீஸ்வரர், படிக்கரைநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: அமிர்தகரவல்லி, மங்களநாயகி.
தல மரம்			: இலுப்பை
தீர்த்தம்				: பிரமதீர்த்தம், அமிர்ததீர்த்தம்.
வழிபட்டோர்			: பாண்டவர்கள், பிரமன், மாந்தாதா, நளன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: சுந்தரர் - முன்னவன் எங்கள்

தல வரலாறு :

  • மக்கள் வழக்கில் இலுப்பைப்பட்டு என்று வழங்குகிறது.

  • இத்தலத்தருகே பண்டைக் காலத்தில் மண்ணியாறு ஓடியதால் 'பழ மண்ணிப் படிக்கரை ' என்றாயிற்றென்பர்.

  • இத்தலத்திற்கு மதூகவனம் என்றும் பெயர். (மதூகம் - இலுப்பை; பட்டு - ஊர்) ஒரு காலத்தில் இலுப்பை வனமாக இருந்ததாலும், இத்தல மரம் இலுப்பையாதலினும் இத்தலம் இப்பெயர் பெறலாயிற்று.

  • இறைவன் விஷத்தைப் பருகியபோது உமாதேவி தன் கரத்தால் அவருடைய கழுத்தை ஸ்பரிசித்த தலம்.

  • பாண்டவர்கள் சித்திரைப் பௌர்ணமி நாளில் இங்கு வந்து பஞ்சலிங்கங்களையும் வழிபட்டதாக வரலாறு. பிரமனும் மாந்தாதாவும், நளனும் கூட, இங்கு வந்து வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது.

  • தருமர் வழிபட்டது நீலகண்டேஸ்வரர்; வீமன் வழிபட்டது மகதீஸ்வரர்; அருச்சுனன் வழிபட்டது படிக்கரைநாதர்; நகுலன் வழிபட்டது பரமேசர்; சகாதேவன் வழிபட்டது முத்தீசர் என்று சொல்லப்படுகிறது.

  • திரௌபதி வழிபட்டது வலம்புரி விநாயகர் எனப்படுகிறது.

view of the temple

சிறப்புகள் :

  • பிராகாரத்தில் வீமன், நகுல பூசித்த லிங்கங்களும், திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகரும் உள்ளனர்.

  • இத்தலத்திற்குரிய தலபுராணம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களால் பாடப்பட்டுள்ளது.

அமைவிடம்

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
வைத்தீஸ்வரன்கோயில் - திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு, வளப்புத்தூர் ஆகியவற்றைத் தாண்டி, மணல்மேடு அடைந்து, பஞ்சாலையைக் கடந்து, 'பாப்பாகுடி' என்று கைகாட்டி உள்ள இடத்தில் அதுகாட்டும் சாலையில் (வலப்புறமாக) சென்று பாப்பாகுடியையும் கடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.

< PREV <
காவிரி வடகரை 29வது
தலம் வாழ்கொளிபுத்தூர்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 31வது
தலம் ஓமாம்புலியூர்