திருப்பயற்றூர் (திருப்பயத்தங்குடி) கோயில் தலவரலாறு
Sthala puranam of Thiruppayatrur Temple


இறைவர் திருப்பெயர்		: முக்தபுரீஸ்வரர், திருப்பயற்றுநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: நேத்ராம்பிகை, காவியங்கண்ணி.
தல மரம்			: சிலந்தி மரம் (தட்சிணாமூர்த்தி சந்நிதியில் உள்ளது.)
தீர்த்தம்				: கருணா தீர்த்தம் (இதனை பிரம தீர்த்தம் என்றும் கூறுவர்)
வழிபட்டோர்			: பைரவ மகரிஷி
தேவாரப் பாடல்கள்		: அப்பர் - உரித்திட்டார் ஆனை.
Tirupayatrur temple

தல வரலாறு

  • இன்று மக்களால் 'திருப்பயத்தங்குடி' என்று வழங்கப்படுகிறது.

  • சுங்கம் கொடுக்க அஞ்சிய வணிகன் ஒருவன், சுங்கமில்லாத பயறு மூட்டைகளாகத் தன் மிளகுப் பொதிகளை மாற்றித் தருமாறு வேண்ட, அவனுக்கு இறைவன் பயறு மூட்டைகளாக மாற்றித் தந்து அருளியதால் பயற்றுநாதர் என்று பெயர் பெற்றார் என்பது செவி வழிச் செய்தி.

சிறப்புகள்

  • மூலவர் - ஆவுடையார் நாற்கோண வடிவம்; பழமையான திருமேனி.

  • இங்குள்ள கருணா தீர்த்தத்தில் மூழ்கி அம்பிகையை வழிபட்டால் கண்நோய் நீங்கும் என்றொரு செய்தி சாசனத்தின் மூலம் தெரிய வருகிறது.

  • (தலமரமாகிய சிலந்தி மரம் - இம்மரத்தின் மலர்கள் மஞ்சள் நிறத்தில் சிலந்தி பூச்சி வடிவில் இருக்கும். சித்திரை வைகாசியில் பூக்கும் - மணமுண்டு; இலை, புன்னையிலைபோல இருக்கும்.)

Sri Mukthapuriswarar temple, Thiruppayatrur.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்துச் சாலையில் கங்களாஞ்சேரியை அடைந்து, அதையடுத்து வலப்பக்கமாகப் பிரிந்து செல்லும் நாகூர் சாலையில் சென்று, மேலப்பூதனூர் அடைந்து அங்கிருந்து பிரியும் திருமருகல் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.

< PREV <
காவிரி தென்கரை 77வது தலம்
திருஇராமனதீச்சரம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 79வது தலம்
திருச்செங்காட்டங்குடி