|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருப்பாற்றுறை (திருப்பாலத்துறை)
இறைவர் திருப்பெயர் : ஆதிமூலேசுவரர், ஆதிமூலநாதர்.
இறைவியார் திருப்பெயர் : மேகலாம்பிகை, மோகநாயகி, நித்யகல்யாணி.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : கொள்ளிடம்.
வழிபட்டோர் : மார்க்கண்டேயர், சூரியன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - காரார் கொன்றை கலந்த.
தல வரலாறு
சிறப்புகள்
- மூலவர் சுயம்பு திருமேனி - சிறிய மூர்த்தி.
அர்த்த மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் நான்கு தூண்கள் விளங்கி, "தேவசபை" என்றழைக்கப்படுகிறது.
கல்வெட்டில் இத்தலம் "கொள்ளிடம் தென்கரை நாட்டுப் பிரமதேயமான உத்தமசீவி சதுர்வேதி மங்கலத் திருப்பாற்றுறை" என்றும் இறைவன் "திருப்பாற்றுறை மகாதேவர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
முதற்பராந்தகன், விக்கிரமசோழன் காலத்திய இக்கல்வெட்டுக்களில் ஒன்றின் மூலம் கோயிலருகில் திருநாவுக்கரசர் திருமடம் இருந்ததாக அறிகிறோம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவானைக்காவிலிருந்து 10-கி. மீ. தொலைவில் உள்ளது. 'திருச்சிமெயின்கார்டு கேட்'டிலிருந்து திருவானைக்கா வழியாக கல்லணை செல்லும் நகரப் பேருந்தில் சென்று பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி, கொள்ளிடம் நோக்கி வரவேண்டும்.
|