|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருப்பறியலூர் ([கீழப்] பரசலூர்)
இறைவர் திருப்பெயர் : வீரட்டேஸ்வரர், தக்ஷபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : இளங் கொம்பனையாள்.
தல மரம் : வில்வம். (பலா என்றும் சொல்லப்படுகிறது.)
தீர்த்தம் : உத்திரவேதி தீர்த்தம்.
வழிபட்டோர் :
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.
- கருவறைச் சுவரில் தக்கன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளது.
- மூலவர் பெரிய திருமேனி - சுயம்பு மூர்த்தி - சதுர ஆவுடையார்; கோமுகம் மாறி உள்ளது.
- இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒன்பதும் இல்லை. சூரியன் மட்டுமே உள்ளார்.
- இங்கு அர்த்தசாம வழிபாடு பைரவருக்கு நடத்தப்படுகிறது.
- சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலக் கல்வெட்டில் இத்தலம் "ஜயங்கொண்ட சோழவளநாட்டு வீழைநாட்டு ராஜ நாராயண சதுர்வேதி மங்கலமான பறியலூர் " என்றும்;
இறைவன் "திருவீரட்டான முடையார்", "தக்ஷேஸ்வரமுடையார்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
- திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள் அருளிச் செய்த தலபுராணம் உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை - தரங்கம்பாடி பாதையில் 'செம்பொன்னார் கோயிலை' அடைந்து, அவ்வூர் மெயின் ரோட்டில் 'நல்லாடை' என்று கைகாட்டி காட்டும் பாதையில் (வலப்புறமாக) சிறிது
தூரம் சென்று, 'பரசலூர் ' சாலையில் திரும்பி 2 கி. மீ. செல்லவேண்டும். (இப்பாதை குறுகலான ஒருவழிப் பாதை)
|