பரிதிநியமம்
(பருத்தியப்பர் கோயில், பரிதியப்பர் கோயில்)

இறைவர் திருப்பெயர்		: பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர்.
இறைவியார் திருப்பெயர்		: மங்களாம்பிகை, மங்களநாயகி.
தல மரம்			: அரசமரம்
தீர்த்தம்				: சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்.  (சூரிய தீர்த்தம் கோயிலின் 
				  முன்பும்; சந்திர தீர்த்தம் கோயிலின் பின்பும் உள்ளது.)
வழிபட்டோர்			: சூரியன்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - விண்கொண்ட தூமதி சூடி.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
ParitiNiyamam temple

தல வரலாறு

  • இக்கோயிலை மக்கள் "பருத்தியப்பர் கோயில்" என்று அழைக்கின்றனர்.

  • பரிதி - சூரியன்; நியமன் - கோயில். இத்தலம் சூரியன் வழிபட்ட தலம். (இக்கோயில் ஒரு காலத்தில் சூரியன் கோயிலாக இருந்து பின்பு சிவாலயமாக மாறியிருக்கலாம் என்பர்.) - சூரியன் வழிபடும் உருவம் கோயிலில் உள்ளது.

சிறப்புகள்

  • இத்தலத்திற்கு அரசவனம் என்றும் பெயருண்டு.

  • சூரியன் வழிபட்ட ஏழு தலங்களுள் இதுவும் ஒன்று. (ஏனையவை - திருக்கண்டியூர், வேதிகுடி, குடந்தைக்கீழ்கோட்டம், தெளிச்சேரி, புறவார் பனங்காட்டூர், நெல்லிக்கா)

  • இங்குள்ள முருகப் பெருமான் சிறந்த வரப்பிரசாத மூர்த்தியாக வழிபடப் பெறுகின்றார்.

  • மூலவர் - சுயம்பு மூர்த்தம்.

  • பங்குனித் திங்கள் 17, 18, 19 நாள்களில் சூரிய ஒளி சுவாமி மீதுபடுகிறது.

  • சண்டேசுவரர் சந்நிதியில் மூன்று திருமேனிகள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை பேருந்துச் சாலையில் மேல உளூர் (உழவூர்) சென்று அங்கிருந்து 2-கி. மீ.-ல் உள்ள இத்தலத்தை அடையலாம். தஞ்சையிலிருந்து மாரியம்மன்கோயில் வழியாகவும், மன்னார்குடிச் சாலை சடையார் கோயில் பொன்றாப்பூர் வழியாகவும் நகரப் பேருந்துகள் செல்கின்றன.

< PREV <
காவிரி தென்கரை 100வது
தலம் திருஅவளிவணல்லூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 102வது
தலம் திருவெண்ணியூர்