|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருப்பராய்த்துறை
இறைவர் திருப்பெயர் : தாருகவனேஸ்வரர், பராய்த்துறைநாதர்.
இறைவியார் திருப்பெயர் : ஹேமவர்ணாம்பாள், பசும்பொன்மயிலாம்பாள்
தல மரம் : பராய் மரம்
தீர்த்தம் : காவிரி
வழிபட்டோர் : இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - நீறுசேர்வதொர் மேனியர்.
2. அப்பர் - கரப்பர் கால மடைந்தவர்.
தல வரலாறு
பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் 'பராய்த்துறை' எனப்படுகிறது. இத்தலத்திற்கு 'தாருகாவனம்' என்றும் பெயருண்டு. (பராய் மரம், சமஸ்கிருதத்தில் 'தாருகா விருக்ஷம்' எனப்படுகிறது.)
இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்தார்.
சிறப்புக்கள்
இங்குள்ள நவகிரகங்களுள் சனிபகவானுக்கு மட்டுமே வாகனம் உள்ளது; ஏனையோருக்கு வாகனமில்லை.
முதற் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது இத்திருக்கோயில்.
கல்வெட்டில் இத்தலம், "உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை" என்றும்; இறைவன் பெயர் "பராய்த்துறை மகாதேவர் " என்றும்; "பராய்த்துறைப் பரமேஸ்வரன்" என்றும் குறிக்கப்படுகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருச்சி - கரூர் - குளித்தலை செல்லும் பேருந்துச் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். திருச்சி - ஈரோடு இருப்புப் பாதையில்
உள்ளது; எலமனூர் புகைவண்டி நிலையத்தில் இறங்கி செல்லலாம்.
|