திருப்பரங்குன்றம்

இறைவர் திருப்பெயர்		: பரங்கிரிநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: ஆவுடைநாயகி.
தல மரம்			: 
தீர்த்தம்				: சரவணப்பொய்கை, இலட்சுமி தீர்த்தம், பிரமகூபம்.
வழிபட்டோர்			: பராசரமுனிவரின் புதல்வர், நக்கீரர், சிபிமன்னன், 
				  பிரம்மா ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	நீடலர்சோதி வெண்பிறையோடு. 
				  2. சுந்தரர்  -	கோத்திட்டையுங் கோவலுங்.
Tirupparankunram temple

தல வரலாறு

  • இத்தலம் சிவத்தலமாயினும், இன்றைய நடைமுறையில் முருகனுக்குரிய சிறப்புதலமாகவே வழிபடப்படுகின்றது.

  • முருகப்பெருமான் தெய்வயானையை மணம் புரிந்த பதி.

  • 11 கல் வெட்டுக்கள் கிடைத்துள்ளன. ஐரோப்பிய படைகளின் இடிபாடுகளிலிருந்து கோயிலை காப்பதற்காக முத்துக் கருப்பன் மகன் செட்டி என்பவன், கோபுரத்திலிருந்து விழுந்து இறந்துவிட, அவன் குடும்பத்தாருக்கு இறையிலியாக நிலங்கள் அளித்த செய்தியை கல்வெட்டு கூறகிறது.

சிறப்புக்கள்

  • முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளுள் முதலாவதாக விளங்கும் தலம்
  • நக்கீரர் வாழ்ந்த தலம்.
  • முருகப்பெருமானின் (ஞான) வேலுக்கு பாலபிஷேகம் செய்வது தனிச்சிறப்பு.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மதுரைக்குப் பக்கத்தில் உள்ளது. மதுரையிலிருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன.

< PREV <
பாண்டி நாட்டு 2வது
தலம் திருஆப்பனூர்
Table of Contents > NEXT >
பாண்டி நாட்டு 4வது
தலம் திருஏடகம்