|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருப்பாண்டிக்கொடுமுடி
இறைவர் திருப்பெயர் : கொடுமுடிநாதர், மகுடேஸ்வரர், மலைக்கொழுந்தீசர்.
இறைவியார் திருப்பெயர் : பண்மொழிநாயகி, திரிபுரசுந்தரி, வடிவுடைநாயகி.
தல மரம் : வன்னி
தீர்த்தம் : காவிரி, பிரமதீர்த்தம், தேவதீர்த்தம்
வழிபட்டோர் : பரத்வாஜர், அகத்தியர்
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - பெண்ணமர் மேனியினாரும்.
2. அப்பர் - சிட்டனைச் சிவனைச்.
3. சுந்தரர் - மற்றுப் பற்றெனக் கின்றி.
தல வரலாறு
ஆதிசேஷனுக்கும்,வாயுவிற்கும் நடந்த வல்லமைப் போட்டியில்,ஆதிசேஷனால் முழுமையாக மூடப்பட்டிருந்த மேருமலையிலிருந்து ஐந்து மணிகள் சிதறிச் சிகரங்களாக விழுந்தன.அவற்றுள், வைரம் இத் தலமாகும்.ஏனயவை1.சிவப்பு மணி-திருவண்ணாமலை,2.மரகதம்-திரு ஈங்கோய்மலை,3.மாணிக்கம்-திரு வாட்போக்கி,4.நீலம்-பொதிகை மலை.
- பரத்வாஜருக்கு, ஈசன் முயலகன் இல்லாமல் நடனக் காட்சி அருள் புரிந்த தலம்.
சிறப்புக்கள்
- இத்தலம் மும்மூர்த்தித் தலம் என்பர்.
- இக்கோவிலில் எட்டு கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம் திருச்சி - ஈரோடு இரயில் பாதையில் உள்ள முக்கிய இரயில் நிலையமாகும். கொடுமுடி என தற்போது வழங்கப்படுகின்றது. இரயில் நிலையத்திலிருந்து 1 கி. மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. திருச்சி, கரூர் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.
|