திருப்பல்லவனீச்சுரம்
(காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார்)

இறைவர் திருப்பெயர்		: பல்லவனேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: சௌந்தர நாயகி.
தல மரம்			: மல்லிகை, புன்னை. 
			 	 (தற்போதில்லை)
தீர்த்தம்				: காவிரி.
வழிபட்டோர்			: அகத்தியர், பல்லவ 
				 மன்னன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - 	1. அடையார்தம் புரங்கள் மூன்றும், 
						2. பரசு பாணியர் பாடல்

Pallavanicharam temple rAjagOpuram

தல வரலாறு

 • பல்லவனீச்சரம் என்னும் இத்தலம் இன்று காவிரிப்பூம்பட்டினம் - பூம்புகார் என்று வழங்கப்படுகிறது.

 • கோயிலுக்கு எதிரில் அகத்தியர் உண்டாக்கிய ஜான்னவி தீர்த்தம் - திருக்குளம் உள்ளது.

சிறப்புக்கள்

 • பட்டினத்தாரின் அவதாரப் பதி.

 • இயற்பகை நாயனார் அவதரித்து சிவத்தொண்டாற்றிய திருப்பதி.
  	அவதாரத் தலம்	: திருப்பல்லவனீச்சுரம் (பூம்புகார்)
  	வழிபாடு		: சங்கம வழிபாடு.
  	முத்தித் தலம் 	: திருச்சாய்க்காடு.
  	குருபூசை நாள் 	: மார்கழி - உத்திரம்.
  

 • திருஞானசம்பந்தரின் பாடல் பெற்றத் திருத்தலம்.

 • வெளிமண்டபத்தில் தலப்பதிக கல்வெட்டு உள்ளது.

 • மாறவர்மன் திருபுவனச் சக்ரவர்த்தி சுந்தரபாண்டியனது 17-ஆம் ஆட்சியாண்டில் இராஜாதி ராஜ வளநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்துக் கோயிலுக்கு நிலம் வழங்கியதையும் மற்றும் சாலி வாகனசகம். கலி 4775 சகம் 1670 (கி. பி. 1757) ஜய வருடம் ராயரவுத்த மிண்ட நாயனார் முதலியோர் திருச்சாய்க்காட்டுச்சீனம், காவிரிப்பூம்பட்டினம் மாகாணம் பல்லவனீச்சரக் கோயிலுக்குத் திருப்பணிக்கும் வழிபாட்டிற்கும் நிலம் வழங்கிய செய்தியை இங்குள்ள இரு வெவ்வேறு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

 • உள் மண்டபத்தில் தில்லையமைப்பில் அமைந்துள்ள சபாபதி சபை தரிசிக்கத்தக்கது.

 • ஆடி மாதத்தில் பட்டினத்தாருக்கு பன்னிரு நாள்கள் திருவிழா எடுக்கிறார்கள்.

Pallavanicharam temple Vimanam

Cattaiyappar Tripada

அமைவிடம்
	அ/மி. பல்லவனேசுவரர் திருக்கோயில், 
	பூம்புகார், 
	நாகப்பட்டினம் (மாவட்டம்) - 609 105.

	தொலைபேசி : 04364 - 260151.

மாநிலம் : தமிழ் நாடு
பூம்புகாருக்குள் நுழையும்போது, எல்லையில் உள்ள 'கண்ணகி வளைவை'த் தாண்டியதும் கோயில் உள்ளது.
சீர்காழி, சிதம்பரம், திருச்சாய்க்காடு, மயிலாடுதுறை இவ்விடங்களிலிருந்து பேருந்துகள் உள்ளன.

< PREV <
காவிரி வடகரை 9வது
தலம் திருச்சாய்க்காடு
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 11வது
தலம் திருவெண்காடு

 • இயற்பகை நாயனார் வரலாறு (மூலம்)