திருப்பைஞ்ஞீலி

இறைவர் திருப்பெயர்		: நீலகண்டேஸ்வரர், ஞீலிவனநாதர், கதலிவசந்தர், 
				 ஆரண்யவிடங்கர்.
இறைவியார் திருப்பெயர்		: விசாலாட்சி
தல மரம்			: ஞீலி வாழை.
தீர்த்தம்				: அப்பர் தீர்த்தம்.
வழிபட்டோர்			: உமாதேவி.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	ஆரிடம் பாடிலர். 
				 2. அப்பர்  -	உடையர் கோவண. 
				 3. சுந்தரர் -	காருலாவிய நஞ்சை
Tirupaigneeli temple

தல வரலாறு

 • ஞீலி - இது ஒருவகை வாழை; தனி இனம். வேறிடத்தில் பயிராவதில்லை. இதன் இலை, காய், கனி அனைத்தும் இறைவனுக்கே பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மனிதர்கள் உண்டால் பிணி வருதல் இன்றும் கண்கூடு. இக்கனியைச் சுவாமிக்கு நிவேதித்து தண்ணீரில் விட்டுவிடுவார்கள்.

 • இறைவன் அப்பர்பெருமானுக்கு பொதி சோறளித்துப் பசியைப் போக்கிய தலம்.

 • இங்கு வசிட்டமுனிவருக்கு நடராசப் பெருமான் நடனக் காட்சியருளியதால், இத்தலம் மேலைச்சிதம்பரம் என்றும் பெறுகின்றது.

சிறப்புகள்

 • ஞீலிவனம், கதலிவனம், அரம்பைவனம், விமலாரண்யம், தரளகிரி, சுவேதகிரி, வியாக்ரபுரி, மேலைச்சிதம்பரம் முதலியன இத்தலத்திற்குரிய வேறுபெயர்கள்.

 • மதிலின் மேற்றளம் புலிவரிக் கற்களால் ஆனவை. (இவ்வகைக் கற்கல் இங்கு மட்டுமே கிடைக்கின்றன. இதன் காரணமாகவே இத்தலம் வியாக்ரபுரி என்னும் பெயரைப் பெற்றதுபோலும்.)

 • இரண்டாங் கோபுரவாயிலில் அப்பருக்குக் கட்டமுது தந்து அருள்புரிந்து மறைந்த இடமான - கோயில், நிலமட்டத்திற்குக் கீழே அமைந்துள்ளது.

 • கோயில் அமைப்பு பல்லவர் கால அமைப்புடையது.

 • சோழர் காலக் கல்வெட்டுக்களில் "பைஞ்ஞீலி மகாதேவர், பைஞ்ஞீலி உடையார் " என்னும் பெயர்களால் இறைவன் குறிக்கப்படுகிறார்.

 • இத்தலத்திற்கு மதுரை மெய்ப்பாத புராணிகர் தலபுராணம் பாடியுள்ளார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருச்சியிலிருந்து பேருந்து செல்கிறது. திருச்சியிலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக இத்தலத் அடையலாம்.

தொடர்பு :

 • 0431 - 2560813

< PREV <
காவிரி வடகரை 60வது
தலம் திருஆனைக்கா
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 62வது
தலம் திருப்பாச்சிலாச்சிராமம்