திருப்பாசூர் திருக்கோயில் தல வரலாறு

Pasoor Temple sthala puranam

	இறைவர் திருப்பெயர்	: பாசூர்நாதர், வாசீஸ்வரர், பசுபதீஸ்வரர்
	இறைவியார் திருப்பெயர்	: பசுபதிநாயகி, மோகனாம்பாள்
	தல மரம்		: மூங்கில்
	தீர்த்தம்			: சோம தீர்த்தம், மங்கள தீர்த்தம்
	வழிபட்டோர்		: அம்பிகை, திருமால், சந்திரன்
	தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	1. சிந்தையிடையார் தலையின்.

				  2. அப்பர்   -	1. முந்தி மூவெயிலெய்த, 
						2. விண்ணாகி நிலனாகி.

thirupacur temple

தல வரலாறு

  • தலமரத்தின் பெயரால், இதுஇப் பெயர் பெற்றது. (பாசு - மூங்கில்)

  • குறும்பர் அரசனுக்குச் சார்பாகச் சமணர்கள், கரிகால்சோழன் மீது ஏவிய பாம்பை இறைவன் எழுந்தருளித் தடுத்தாட்டினார் .இதை, அப்பர் இத் தலத்திற்குரிய தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புகள்

  • சோழர் காலக் கல்வெட்டுகளும், மற்றய காலத்தவைகளும் ஆக 16 கல்வெட்டுகள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, திருவள்ளூர்க்கு வடக்கில் 5-கி. மீ. தூரத்தில் இருக்கிறது. திருவள்ளூர் - பேரம்பாக்கம் நகரப் பேருந்திலோ, காஞ்சிபுரத்திலிருந்து கடம்பத்தூர் வழியாக திருவள்ளூர் செல்லும் பேருந்துகளிலோ சென்று இத்தலத்தை அடையலாம்.

தொடர்பு :

  • 09894486890

< PREV <
தொண்டை நாட்டு 15வது
தலம் திருவாலங்காடு
Table of Contents > NEXT >
தொண்டை நாட்டு 17வது
தலம் திருவெண்பாக்கம் (பூண்டி)