|
Home > Temples of India > pADal peRRa sthalam
ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்)
இறைவர் திருப்பெயர் : ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : ஓணன், காந்தன் (இவர்கள் வாணாசுரனின் சேனாதிபதிகளாவர்), சலந்தரன்.
தேவாரப் பாடல்கள் : சுந்தரர்.
தல வரலாறு
- வாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் இருவர் வழிபட்ட தலம்; ஆதலின் இது ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது.
-
இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன.
-
சலந்தரன் வழிபட்டதாக சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே உள்ளது; இக்கோயிலுக்கு வெளியேயிருந்த, சலந்தரன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனியை எடுத்துவந்து இங்கு தனிக்கோயிலாக ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவே சலந்தரேசம் எனப்படுகிறது; இது பிற்கால பிரதிஷ்டையாகும்.
-
இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத் திறம் பேசி, 'நெய்யும் பாலும் தயிரும் கொண்டு' என்று தொடங்கும் பதிகம் பாடி
பொன் பெற்றார் என்பது வரலாறு.
- மேற்படி பதிகத்துள் சுந்தரர் குறித்துள்ளதற்கேற்ப இக்கோயிலில் 'வயிறுதாரிப் பிள்ளையார் ' சந்நிதி உள்ளது.
-
மேற்படி பதிகத்தில் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும்போது, இறைவன் பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும்;
அஃதறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க, சுந்தரர்
அவற்றைப் பெற்றார் என்பதாக இப்பகுதியில் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறது.
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
சிறப்புக்கள்
- காஞ்சிபுரத்திலுள்ள பாடல் பெற்ற திருக்கோயில்கள் ஐந்தினுள் இத்திருக்கோயிலும் ஒன்று.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - அரக்கோணம் பேருந்து சாலையில் (கோயில் உள்ள பகுதி பஞ்சுப்பேட்டை எனப்படும்) உள்ளது.
பாடல்பெற்றத் தலங்களைத் தொடர்ந்து செல்ல : -
காஞ்சித் தலங்களைத் தொடர்ந்து செல்ல : -
|