திருநீலக்குடி (தென்னலக்குடி)

இறைவர் திருப்பெயர்		: மனோக்ஞ நாதசுவாமி, வில்வாரண்யேசுவரர், 
				 பிரமநாயகர், நீலகண்டேஸ்வரர், தைலாப்பியங்கேசர், 
				 காமதேனுபுரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்		: அநூபமஸ்தனி (திருமணக்கோலம்), 
				 பக்தாபீஷ்டதாயினி (தவக்கோலம்)
தல மரம்			: பஞ்சவில்வம்.

தீர்த்தம்				: தேவி தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், 
				 பிரம தீர்த்தம், க்ஷீரகுண்டம்.

வழிபட்டோர்			: வசிட்டர், காமதேனு, தேவமாதர், மார்க்கண்டேயர் முதலியோர்.

தேவாரப் பாடல்கள்		: அப்பர் - வைத்த மாடும் மனைவியும்.

entrance of the temple

தல வரலாறு :

 • மக்கள் வழக்கில் 'தென்னலக்குடி' என்று வழங்குகின்றது.

 • பாற்கடலில் அமுதுகடைந்த காலத்தில் தோன்றிய நஞ்சையுண்டு இறைவன் நீலகண்டராக எழுந்தருளி விளங்கும் தலமாதலின் திருநீலக்குடி என்றாயிற்று.

second entrance of the temple

சிறப்புக்கள் :

 • இத்தலத்திற்கு பஞ்சவில்வாரண்ய«க்ஷத்திரம் என்றும் பெயருண்டு.

 • அப்பரின் திருவாக்கில் 'நெல்லுநீள் வயல் நீலக்குடி' என்று மலர்ந்ததற்கேற்ப சுற்றிலும் வயல்கள் உள்ளன.

 • உட்பிரகாரத்தில் பிரம்மா வழிபட்ட பிரம்மலிங்கம் உள்ளது.

 • மூலவர் - சிறப்பான, அதிசய மூர்த்தியாக திகழ்கிறார். இங்கு மூலவருக்கு தைலாபிஷேகம் (எண்ணெய்) விசேஷம். எவ்வளவு எண்ணெய் வார்த்துத் தேய்த்தாலும் அவ்வளவும் பாணத்திற்குள்ளேயே சுவறிப்போகும்; வெளியே வழியாது. தவமிருக்கும் அம்பாளே, சுவாமிக்குத் தலாபிஷேகம் செய்வதாக ஐதீகம். ஆகவே அம்பாள் முன் எண்ணெய் வைத்துப் பின்பு எடுத்துச் சுவாமிக்குத் தேய்ப்பர். (சித்திரை, கார்த்திகை, மாசியில் இந்த அபிஷேகம் செய்வது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

 • இங்குள்ள பலாமரம் தெய்விகமானது. காய்க்குங் காலத்தில் நித்யபடியாக பலாச்சுளை நிவேதமுண்டு. நிவேதித்த பலாச்சுளைச் சாப்பிடுவது நல்லது. ஆனால் நிவேதிக்காமல் பலாப்பழத்தையே வெளியில் எடுத்துக்கொண்டு போனால் நிச்சயமாக அப்பலாபழத்தில் வண்டுகள் உண்டாகிப் பழம் கெட்டுப்போவது இன்றும் கண்கூடானதொன்றாகும் என்று சொல்லப்படுகிறது.

அமைவிடம்

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - காரைக்கால் சாலையில், கும்பகோணத்தை அடுத்துள்ளது. ஆடுதுறையிலிருந்தும் தென்னலக்குடிக்கு பேருந்து வசதி உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 31வது தலம்
திருத்தென்குரங்காடுதுறை
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 33வது தலம்
திருவைகல்மாடக்கோயில்