திருநெல்வேலி தலபுராணம்
Sthala puranam of Tirunelveli Temple

இறைவர் திருப்பெயர்		: நெல்லையப்பர், வேணுவனநாதர், வேய்முத்தநாதர், 
				 நெல்வேலிநாதர், சாலிவாடீசர், வேணுவனேஸ்வரர், 
				 வேணுவனமகாலிங்கேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்		: காந்திமதி அம்மை, வடிவுடையம்மை.
தல மரம்			: மூங்கில் (வேணு, வேய்).

தீர்த்தம்				: பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி), 
				 கருமாறித்தீர்த்தம், சிந்துபூந்துறை.
வழிபட்டோர்			: 
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - மருந்தவை மந்திரம்.
Nellaiyappar temple

தல வரலாறு

 • வேதபட்டர், இறைவனுக்கு திரு அமுதுக்கு உலரப் போட்டிருந்த நெல், மழையினால் நனையாதவாறு இறைவன் வேலியிட்டு காத்தமையால் இத்தல இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்று திருநாமம் மலர்ந்தது.

 • பாற்குடம் சுமந்து சென்ற அன்பனை (முழுதுங்கண்ட ராமக்கோன்) இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடறச் செய்து பாலைத் தன்மீது கவிழச் செய்து, அதனால் வெட்டுண்டு, காட்சி தந்தருளினார். சிவலிங்கத் திருமேனியின் மேற்புறம் வெட்டப்பட்ட அடையாளம் உள்ளது. இப்போதுள்ளது 21-ஆவது ஆவுடையார் என்றும் 20 ஆவுடையார்கள் பூமியின் கீழ் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது. இம்மூர்த்தி 'மிருத்யஞ்சமூர்த்தி' ஆவார். அன்வர்கான் என்ற இஸ்லாமியரின் மனைவிக்கு உண்டான வயிற்றுவலி நீங்காமையால் அவன் வழிபட்டுப் பேறு பெற்ற சிவலிங்கம் 'அனவரத லிங்கம்' எனப்படுகிறது. இதற்கு அவர் தந்துள்ள நகைகளும் உள்ளன. உச்சிகாலத்தில் மட்டும் அம்பிகையே - இறைவியே நேரில் வந்து சுவாமியை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். அகத்தியருக்கு இறைவன் கல்யாண காட்சியைக் காட்டி அருளிய தலம்.

சிறப்புக்கள்

 • வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், பிரம விருந்தபுரம், தாருகாவனம் என்பன வேறு பெயர்கள்.

 • இக்கோயிலில் ஊஞ்சல், திருக்கல்யாண, ஆயிரங்கால், வசந்த, சங்கிலி, சோமவார, நவக்கிரக, மகா மண்டபகங்கள் சிற்ப வேலைபாடுகளுடன் விளங்குகின்றன.

 • திருமாலின் மார்பில் சிவலிங்க அடையாளம் காணப்படுகிறது.

 • இத்தலம் பஞ்ச சபைகளில் தாமிர சபையாகும்.

 • இங்குள்ள பொல்லாப் பிள்ளையாருக்கு புத்திரபேறு வேண்டுபவர்கள் 41 நாட்கள் விரதமிருந்தால், புத்திரபேறு அடைகின்றார்கள்.

 • மாசி மகத்தில் அப்பர் தெப்பம் சிறப்பு.

 • கோயிலின் சார்பில் தேவாரப் பாடசாலை நடைபெறுகிறது.

 • காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி, நெல்லையப்பர் ஆதாரப் பள்ளி, ஞானசம்பந்தர் பாலர் பள்ளி முதலியவை நடைபெறுகின்றது.

Nelveli temple

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னை, மதுரை மற்றும் அநேக ஊர்களிலிருந்தும் புகைவண்டி மற்றும் பேருந்து வசதிகள் நிறைய உள்ளன.

< PREV <
பாண்டி நாட்டு 13வது
தலம் திருக்குற்றாலம்
Table of Contents > NEXT >
கொங்கு நாட்டு 1வது தலம்
திருப்புக்கொளியூர் (அவிநாசி)