திருநாவலூர்

Tirunavalur temple
இறைவர் திருப்பெயர்		: பக்தஜனேஸ்வரர், திருநாவலேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: மனோன்மணி, சுந்தரநாயகி, சுந்தராம்பிகை.
தல மரம்			: நாவல்.
தீர்த்தம்				: கோமுகி தீர்த்தம்.
வழிபட்டோர்			: சுக்கிரன்.
தேவாரப் பாடல்கள்		: சுந்தரர்.

தல வரலாறு

  • சுக்கிரன் வழிபட்டது.

சிறப்புக்கள்

  • மக்கள் வழக்கில் மட்டும் கொச்சையாகத் 'திருநாமநல்லூர் ' என்று வழங்குகின்றனர்.
  • சுந்தரர் அவதாரத் திருத்தலம்.
  • திருமுறைத் தலமற்றுமன்று அருணகிரிநாதரின் திருப்புகழும் உள்ளது.
  • உள்ளே சுந்தரர் சந்நிதி உள்ளது; பரவை, சங்கிலியார் சூல எதிரில் வெள்ளையானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி காட்சி தருகிறார்.
  • தலப்பதிகக் கல்வெட்டுள்ளது.
  • உள்பிரகாரத்தில் நரசிங்க முனையரையர் பூசித்த மிகப்பெரிய சிவலிங்க மூர்த்தம் உள்ளது.
  • கருவறைச் சுவரில் சண்டேஸ்வரர் வரலாறு சிற்ப வடிவில் - பால் கறப்பது, தந்தையார் மரத்தின் மீதேறிப் பார்ப்பது, திருமஞ்சனம் செய்வது, தந்தையின் கால்களை துணிப்பது, இறைவன் கருணை செய்வது வடிக்கப்பட்டுள்ளது.
  • நவக்கிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிராக அவன் வழிப்பட்ட சுக்கிரலிங்கம் உள்ளது.
  • நவக்கிரகங்களில் நடுவில் உள்ள சூரியன் திசைமாறி மூலவரைப் பார்த்தவாறு உள்ளார்.
  • கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி உருவம் - ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின்மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் அமைப்பு; கண்டு மகிழத் தக்கது.
  • சுந்தரர் மடாலயம் அழகான முன்மண்டபம்; சுந்தரர் கையில் செண்டுடன் அழகாக காட்சிதருகிறார்; இங்குள்ள உட்கோயில் தொண்டீச்சரம் எனப்படுகிறது; இது முதற்பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தனால் கட்டுவிக்கப் பெற்றது என்பது கல்வெட்டுச் செய்தி.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னை - திருச்சி டிரங்க் ரோடில் விழுப்புரம் தாண்டி உளுந்தூர்ப்பேட்டைக்கு முன்பாக, மடப்பட்டு தாண்டி, பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரிந்து எதிரே இடப்பக்கமாக செல்லும் பண்ருட்டி சாலையில் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.

< PREV <
நடு நாட்டு 7வது தலம்
திருவதிகைவீரட்டம்
Table of Contents > NEXT >
நடு நாட்டு 9வது தலம்
திருமுதுகுன்றம்