|
Home > Temples of India > pADal peRRa sthalam
நன்னிலம்
இறைவர் திருப்பெயர் : மதுவனேஸ்வரர், பிரகாசநாதர், தேவாரண்யேசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : மதுவனேஸ்வரி, தேவகாந்தார நாயகி.
தல மரம் : வில்வம், கோங்கு, வேங்கை, மாதவி, சண்சபம். (தற்போது வில்வம் மட்டுமே உள்ளது)
தீர்த்தம் : பிரம தீர்த்தம், சூல தீர்த்தம்.
வழிபட்டோர் : சூரியன், அகத்தியர், பிரமன், தேவர்கள்(தேனீக்களாய்) ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : சுந்தரர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- மதுவனம், தேவாரண்யம், சுந்தரவனம், பிருகத்புரம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.
- இக்கோயில் கோச்செங்கட் சோழனின் மாடக்கோயிலாகும்.
- கோயிலுள் பிரமன் வழிபட்ட மகாதேவலிங்கமும், அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் லிங்கமும் உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்துகள் நன்னிலம் வழியாவும் செல்கின்றன. நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்த திருவாரூர் போகும் பாதையில்
அரசு மருத்துவமனை எதிரில் செல்லும் வழியில் சென்றால் கோயிலை அடையலாம்.
|