திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) கோயில் தலவரலாறு
Sthala puranam of Thirunallurpperumanam Temple


இறைவர் திருப்பெயர்		: சிவலோகத் தியாகேசர், 
				 பெருமணமுடைய மகாதேவர்.
இறைவியார் திருப்பெயர்		: வெண்ணீற்று உமை நங்கை, சுவேத 
				 விபூதி நாயகி, விபூதிகல்யாணி.
தல மரம்			: மா.
தீர்த்தம்				: பஞ்சாட்சரதீர்த்தம் முதலான 11 தீர்த்தங்கள்.
வழிபட்டோர்			: பிரமன், முருகன், பிருகு, வசிஷ்டர், அத்ரி, 
				 வியாசர், மிருகண்டு, அகத்தியர், ஜமதக்னி. 
				 (காகபுசுண்டரிஷி ஐக்கியமான தலம்)
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் கல்லூர்ப் பெருமணம்

தல வரலாறு

 • மக்கள் வழக்கில் ஆச்சாள் புரம் என்று வழங்கப்படுகிறது.

 • நல்லூர் - ஊரின் பெயர்; பெருமணம் - கோயிலின் பெயர்.

 • ஞானசம்பந்தருக்கு திருமணம் நடந்ததும்; அவர், திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்ததும் இத்தலத்தில்தான். (திருமணத்திற்கு வந்த அத்தனைப்பேரும் அந்த அற்புத சோதியுள் கலந்தார்கள்.)

Nalloorpperumanam temple
Holy pond of the temple

சிறப்புகள்

 • சம்பந்தர் மணக்கோலத்துடன் சோதியுள் கலந்த காரணம் பற்றி இத்தலத்திற்கு முத்தித்தலம் என்றும் பெயருண்டு.

 • இக்கோயிலில் ஞானசம்பந்தர் திருமணம் செய்துகொண்ட 'தோத்திர பூர்ணாம்பிகை' அம்மையுடன் மணகோலத்தில் உள்ள மூலத்திரு மேனிகள் உள்ளன.

 • சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம், ஞானசம்பந்தர் சோதியில் ஐக்கியமான காட்சி வண்ண சுதை ஓவியமாக உள்ளது.

 • ஞானசம்பந்தர் மனைவியுடன் (தோத்திர பூர்ணாம்பிகை) இத்தலத்தில் இருப்பது விசேஷமானது.

 • உள்வாயிலில் இருபுறமும் தலப் பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.

 • நால்வரைத் தொடர்ந்து, அறுபத்துமூவர் சந்நிதியில் - நாயன்மார்கள் பெயர், குருபூசை நாள் நட்சத்திரம் முதலியன எழுதப்பட்டு அழகாகவுள்ளன.

 • சோழ, பாண்டிய, மகாராட்டிர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன; கல்வெட்டில் இறைவன் 'திருப்பெருமண முடைய மகாதேவர் ' என்று குறிக்கப்படுகின்றார்.

 • நாடொறும் ஆறு கால வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன.

 • இத்தலபுராணம் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரால் பாடப்பட்டுள்ளது.

அமைவிடம்

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம் சிதம்பரம் - சீர்காழி சாலையில், கொள்ளிடத்திலிருந்து 8-கி.மீ. தொலைவில் உள்ளது.

< PREV <
காவிரி வடகரை 4வது
தலம் திருக்கழிப்பாலை
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 6வது
தலம் திருமயேந்திரப்பள்ளி