திருநள்ளாறு திருக்கோயில் தல வரலாறு
Sthala puranam of Thirunallaru Temple


இறைவர் திருப்பெயர்	: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர்
இறைவியார் திருப்பெயர்	: போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை
தல மரம்		: தர்ப்பை
தீர்த்தம்			: நளதீர்த்தம், சிவகங்கை
வழிபட்டோர்		: திருமால், பிரமன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர், 
			 அர்ச்சுனர், நளச் சக்கரவர்த்தி, திக்குப் பாலகர்கள், 
			 வசுக்கள், போஜன், முசுகுந்தச் சக்கரவர்த்தி
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	1. பாடக மெல்லடிப் பாவை, 
					2. போகமார்த்த பூண்முலையாள், 
					3. ஏடுமலி கொன்றையர, 
					4. தளிரிள வளரொளி.

			 2. அப்பர்  -	1. உள்ளாறாததோர் புண்டரிகத் திரள், 
					2. ஆதிகண்ணான் முகத்திலொன்று.

			 3. சுந்தரர் -	 செம்பொன் மேனிவெண் ணீறணி.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
தல வரலாறு

 • இது, நளன் பூஜித்தக் காரணத்தால், நள்ளாறு எனப்படுகிறது. இறைவனருளால், நளன் சனியின் இடர் நீங்கப்பெற்றான்.

 • திருஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது.

சிறப்புகள்

 • இது, முசுகுந்தச் சக்கரவர்த்தி எழுந்தருளுவித்த சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று (தியாகராஜர்-நகவிடங்கர்;நடனம்-உன்மத்த நடனம்).

 • இது, சனி தோஷம் நீங்கும் சிறப்புடைய தலம். இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்னரே சனிபகவான் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். இத்தலத்தின் போகமார்த்த பூண்முலையாள் என்ற மேலே குறிக்கப்பட்டுள்ள பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபட சனி தோஷம் விலகும்..

 • இது,தருமை ஆதீனக் கோவிலாகும்.

 • சோழர்காலக் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன.

அமைவிடம்:

மாநிலம் : தமிழ் நாடு
இது, பேரளம் - காரைக்கால் இரயில் பாதையில் உள்ள நிலையமாகும். இரயில் நிலையத்திற்கு அருகிலேயே கோவில் உள்ளது. காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

தொடர்பு : 04368-236530 / 236504

< PREV <
காவிரி தென்கரை 51வது
தலம் தருமபுரம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 53வது
தலம் கோட்டாறு