|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
இறைவர் திருப்பெயர் : பழமலை நாதர், விருத்தகிரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : பெரிய நாய்கி, பாலாம்பிகை, விருத்தாம்பிகை
தல மரம் : வன்னி
தீர்த்தம் : மணிமுத்தாறு, அக்னி, குபேர, சக்கர தீர்த்தங்கள்
வழிபட்டோர் : பிரமன், அகஸ்தியர்
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. மத்தாவரை நிறுவிக்கடல்,
2. தேவராயும் அசுரராயும்,
3. நின்று மலர்தூவி,
4. மெய்த்தாறு சுவையும்,
5. தேவா சிறியோம் பிழையை,
6. வண்ணமா மலர்கொடு,
7. முரசதிர்ந் தெழுதரு.
2. அப்பர் - 1. கருமணியைக் கனகத்தின்.
3. சுந்தரர் - 1. பொன்செய்த மேனியினீர்,
2. நஞ்சி யிடையின்று நாளை,
3. மெய்யை முற்றப்பொடி.
தல வரலாறு
சிவபெருமானால் முதலில் (ஆதியில்) படைக்கப்பெற்றது. எனவே,முதுகுன்றம் எனப்படுகிறது.
சம்பந்தரால், இத் தலத்தை அடையும்போதும், வலஞ் செய்தபோதும், வழிபட்டபோதும் தனித்தனிப் பதிகங்கள் பாடியருளப்பெற்ற பெருமையுடையது.
இங்கு இறப்பவர்களுக்கெல்லாம் உமாதேவியார் தமது ஆடையால் வீசி இளைப்பாற்ற, இறைவன் அவர்களுக்கு ஐந்தெழுத்தை உபதேசித்துத், தமது உருவமாக்கும்(சாரூப நிலை) திருப்பதி. ஆதலால், இது காசியினும் மேம்பட்டதாகும்.
- சுந்தரர், இறைவனைப் பாடிப் பன்னீராயிரம் பொன்பெற்று அவற்றை மணிமுத்தாறு நதியிலிட்டு, திருவாரூர் கமலாயக் குளத்தில் பெற்றார்.
சிறப்புகள்
- இத்தல விநாயகர் , பாதாள விநாயகர் மிக்க சிறப்புவாய்ந்தவர்.
சோழர்கள், காடவர், பாண்டியர், விஜய நகரத்தார் மற்றும் குறுநில மன்னர்கள் ஆகியோரது கல்வெட்டுகள் மொத்தம் 74 உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, இன்று விருத்தாசலம் என்று வழங்கப்படுகிறது. விழுப்புரம் - திருச்சி இரயில் பாதையில் உள்ள முக்கிய இரயில்நிலையமாகும். நிலையத்திலிருந்து 2-கி. மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பஸ் வசதி உள்ளது.
|