திருமூக்கீச்சரம் - (உறையூர்)

இறைவர் திருப்பெயர்	: பஞ்சவர்ணேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: காந்திமதியம்மை
தல மரம்		: வில்வம் 
தீர்த்தம்			: சிவ தீர்த்தம், நாக தீர்த்தம்
வழிபட்டோர்		: பிரமன், உதங்க முனிவர், கார்கோடகன்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் ( சாந்தம் வெண்ணீறெனப்பூசி), 

தல வரலாறு

  • உதங்க முனிவருக்கு, ஈசன், ஐந்து காலங்களில் ஐந்து நிறங்களில் காட்சி நல்கியத் தலம்.
  • வேதச் சுருதி என்ற அந்தணன் பூஜித்து, பேயுருவம் நீங்கப் பெற்றான்.
  • வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி வென்றமையால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு.

சிறப்புக்கள்

  • இது புகழ்ச்சோழ நாயனார் அவதரித்த திருப்பதி.
  • தமிழ்நாட்டு மூவேந்தரும் சேர்ந்து வழிபட்ட பதி.
  • சோழர் காலக் கல்வெட்டுகள் ஒன்பது படி எடுக்கப்பட்டுள்ளன.
  • கோச்செங்கணாரின் மாடக்கோவிலாகும்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, இன்று உறையூர் என்று வழங்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் ஒரு பகுதியாகும்.தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்தும் இரயில் மூலமாகவும், பஸ் மூலமாகவும் திருச்சி இணைக்கப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து இக் கோவில் 2கீ.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து டவுண்பஸ் வசதி வெகுவாக உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 4வது தலம்
கற்குடி (உய்யக்கொண்டான்மலை)
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 6வது தலம்
திருச்சிராப்பள்ளி - (மலைகோட்டை கோவில்)