மேலைத்திருக்காட்டுப்பள்ளி (திருக்காட்டுப்பள்ளி) கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்		: அக்னீஸ்வரர், தீயாடியப்பர்.
இறைவியார் திருப்பெயர்		: சௌந்தரநாயகி, அழகம்மை.
தல மரம்			: வன்னி, வில்வம்.
தீர்த்தம்				: அக்கினி தீர்த்தம், காவிரி.
வழிபட்டோர்			: அக்கினி, திருமால், பிரமன், சூரியன், பகீரதன், 
				 உறையூர் அரசி முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் -	வாருமன் னும்முலை. 
				 2. அப்பர்  - 	மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை.
melaiturukattuppalli temple

தல வரலாறு

 • மக்கள் வழக்கில் திருக்காட்டுப்பள்ளி என்று வழங்குகிறது. (காவிரியின் வடகரையில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும். இஃது திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது.)

 • அக்கினி வழிபட்ட தலமாதலின் இக்கோயிலுக்கு 'அக்னீஸ்வரம்' என்று பெயர்.

 • உறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனுக்குரியதாகப் பூத்து வந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்து வந்து தர அவற்றைப் பெற்றுத் தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்த மனைவி அம்மலர்களைத் தான் சூடிக்கொள்ளாமல் சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள், இளைய மனைவி தான் சூடி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண், மாரியால் (மழை) அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது என்று சொல்லப்படுகிறது.

சிறப்புகள்

 • இங்குள்ள அக்கினி தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம் வைகாசி விசாகம் முதலிய நாட்களில் நீராடி வழிபடுதல் சிறப்பென்பர்.

 • இக்கோயிலிலுள்ள நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன.

 • மூலவர் - சிவலிங்கத் திருமேனி. நான்கு படிகள் பூமியில் தாழ உள்ளார். படிகள் இறங்கி சுற்றி வலம் வரலாம்.

 • முதல் ஆதித்திய சோழனின் காலத் திருப்பணியைப் பெற்ற கோயில்

 • ( 'பள்ளி ' என்ற சொல்லைக் கொண்டு இவ்வூரில் ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அதற்கேற்ப 24-ஆவது தீர்த்தங்கரரின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளதாம்.)

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருச்சி, தஞ்சை, திருக்கண்டியூர், திருவையாறு, கல்லணை முதலிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு பேருந்துகள் உள்ளன. திருவையாறு - கல்லணை சாலையில் இத்திருக்காட்டுப்பள்ளி உள்ளது.

தொடர்பு :

 • 09442347433.

< PREV <
காவிரி தென்கரை 8வது
தலம் திருநெடுங்களம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 10வது
தலம் திருவாலம்பொழில்