திருமழபாடி

இறைவர் திருப்பெயர்	: வயிரத்தூண் நாதர், வஜ்ஜிரஸ்தம்பேஸ்வரர், வைத்யநாதர், 
			 மழுவாடீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: சுந்தராம்பிகை, அழகம்மை
தல மரம்		: பனை மரம்
தீர்த்தம்			: இலக்குமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் (கொள்ளிடம் 
			 ஆற்றில் உள்ளது.)
வழிபட்டோர்		: நந்தி தேவர், திருமால், இலக்குமி, மார்க்கண்டேயர், 
			 இந்திரன், புருஷாமிருக ரிஷி
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் - 	1. களையும் வல்வினை, 2. காலையார் வண்டினங்,
					3. அங்கையாரழ லன்னழகார். 

			 2. அப்பர்  -	1. நீறேறு திருமேனி, 2. அலையடுத்த பெருங்கடல். 

			 3. சுந்தரர் -	  பொன்னார் மேனியனே.
thirumazapadi temple

தல வரலாறு

 • ஈசன், மார்க்கண்டேயருக்காக மழுவேந்தி, நடனமாடிய பதியாதலின்,இப் பெயர் பெற்றது. நந்திதேவருக்கு சுயஸாம்பிகையை திருமணம் செய்விக்கப் பெற்றத் தலம். பிரமலோகத்திலிருந்தச் சிவலிங்கத்தை, புருஷாமிருக ரிஷி இங்கு எழுந்தருளுவித்தார். இதை மீண்டும் பிரமன், பெயர்க்கமுனைந்தபோது, முடியாமல், பிரமன், இது,"வயிரத் தூணோ" என்று வியந்தமையால், இறைவர் வயிரத் தூண் நாதர் எனப் பெற்றார். ஈசன், சுந்தரர் பால், "மழபாடிக்கு வர மறந்தனையோ" என அழைத்த திருத்தலம்.

சிறப்புகள்

 • திருநந்தியெம் பெருமான், திருக்கல்யாண விழா, ஆண்டுதோறும், பங்குனி புனர்பூச நாளன்று மிகச் சிறப்பாய் நடைபெறுகிறது.

 • கொள்ளிட நதி, இத்தலத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாகச் செல்கிறது.

 • இங்குள்ள சிற்பங்கள் (ஒரே கல்லாலான சோமஸ்கந்தர், ரிஷப வாகனத்தில் குரு தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், கஜசம்காரமூர்த்தி, புருஷாமிருக ரிஷி வழிபடும் காட்சி முதலியன) மிகச் சிறப்பு.

 • திருவையாற்றைச் சுற்றியுள்ள சப்த ஸ்தானங்களுடன் தொடர்புடையது.

 • இக் கோவிலில், சோழர், பாண்டியர், ஹொய்சாளர் ஆகியோரது 30 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, திருவையாற்றிக்கு வடமேற்கே 6-கி.மீ. தூரத்தில் உள்ளது. அரியலூர், திருவையாறு, தஞ்சை, திருச்சி ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.

தொடர்பு :

 • 04329 - 292890, 09786205278.

< PREV <
காவிரி வடகரை 53வது
தலம் பெரும்புலியூர்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 55வது
தலம் திருப்பழுவூர்