மயிலாடுதுறை

இறைவர் திருப்பெயர்		: மயூரநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: அபயாம்பிகை
தல மரம்			: மா, வன்னி.
தீர்த்தம்				: பிரம தீர்த்தம், காவிரி, ரிஷப தீர்த்தம்.
வழிபட்டோர்			: இந்திரன், பிரமன், வியாழபகவான், அகத்தியர், சப்தமாதாக்கள், 
				  உமாதேவி, அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் - 	1. கரவின் றிநன்மா மலர், 
						2. ஏனவெயி றாடரவோ.

				  2. அப்பர்   -	கொள்ளுங் காதன்மை பெய்.
Mayiladuturai temple

தல வரலாறு

  • அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும்; மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று. அம்மை அவ்வாறு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும்; இதனால் இத்தலம் "கௌரி மாயூரம்" என்றும் பெயர் பெற்றது.

சிறப்புகள்

  • ஆயிரம் ஆனால் மாயூரம் ஆகுமா? (மாயூரம் - மயிலாடுதுறை) என்னும் முதுமொழி இதன் சிறப்பை விளக்கும்.

  • காசிக்குச் சமமான ஆறுதலங்களுள் இதுவுமொன்று.

  • சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாம்.

  • கோயில் உட்சுற்றில் இந்திரன், அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

  • இத்தலத்துக் காவிரித் துறையில் (ஐப்பசி) துலா நீராடுதல் மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது.

  • நாடொறும் ஆறு கால வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

  • கந்தபுராணத்தில் வழிநடைப் படலத்தில் இத்தலம் பற்றிய குறிப்பு வந்துள்ளது சிறப்புடையது.

  • மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் தலபுராணம், அபயாம்பிகை மாலையும், அபயாம்பிகை அந்தாதியும் பாடியுள்ளார்.

  • கல்வெட்டில் இத்தல இறைவன் "மயிலாடுதுறை உடையார் " என்று குறிக்கப் பெறுகின்றார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னை - திருச்சி - இராமேஸ்வரம் மெயின்லைன் இருப்புப் பாதையில் உள்ள சந்திப்பு நிலையம். சென்னை, கடலூர், தஞ்சை, விழுப்புரம் முதலான பல ஊர்களிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் ஏராளமாகவுள்ளன.

< PREV <
காவிரி தென்கரை 38வது
தலம் திருஅழுந்தூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 40வது
தலம் திருவிளநகர்