திருமயேந்திரப்பள்ளி (மகேந்திரப்பள்ளி)

இறைவர் திருப்பெயர்		: திருமேனியழகர், சோமசுந்தரர்.
இறைவியார் திருப்பெயர்		: வடிவாம்பாள், வடிவாம்பிகை, வடிவம்மை.
தல மரம்			: கண்டமரம், தாழை.
தீர்த்தம்				: மயேந்திர தீர்த்தம்.
வழிபட்டோர்			: இந்திரன், மயேந்திரன், சந்திரன் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் திரைதரு பவளமுஞ்
view the temple

தல வரலாறு :

  • இன்று மக்கள் வழக்கில் மகேந்திரப்பள்ளி என்று வழங்கப்படுகிறது. பண்டை நாளில் (மன்னன் ஆண்ட பகுதி) இருந்த பகுதி கோயிலடிப்பாளையம் என்பது.

  • அருகில் உள்ள தீவுகோட்டையில் கண்டெடுக்கப்பட்ட நடராசத் திருமேனிதான் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

சிறப்புக்கள் :

  • ஆங்கிலேயர் ஆட்சியில், கிளைவ், இங்கு மன்னன் ஒருவன் ஆண்டு வந்த பகுதியைக் குண்டுவைத்துத் தகர்த்ததாகவும் அப்பகுதி இன்றும் தீவுக்கோட்டை என்று வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள இவ்விடத்தில் பழமையான கொடிக்கம்பம், கொடிமேடை முதலிய சின்னங்கள் உள்ளன. இங்கு மிக அழகான மூர்த்தத்தையுடைய விஜயகோதண்ட ராமசாமிப் பெருமான் கோயில் உள்ளது.

  • இக்கோயிலுக்கும், தீவுகோட்டை நடராசருக்கும் தனித்தனியே அரசால் மோகினிப் பணம் தரப்பட்டு வருகின்றது.

  • ஆண்டுதோறும் இன்றும் பங்குனித் திங்களில் ஒரு வாரம் சூரியஒளி சுவாமி மீது படுகிறது. இதைச் சூரிய வழிபாடாகக் கொண்டாடுகின்றனர்.

அமைவிடம் :

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம் சிதம்பரம் - சீர்காழிச் சாலையில் கொள்ளிடம் பாலம், ஆச்சாள்புரம் இவறைக் கடந்து செல்லவேண்டும். சாலையில் இடை வளைவுகள் அதிகம் இருப்பதால் அங்காங்கே விசாரித்துக்கொண்டு செல்வது நல்லது. சிதம்பரம், சீர்காழியிலிருந்து (ஆச்சாள்புரம் வழியாக) நகரப்பேருந்துகள் செல்கின்றன. தஞ்சை, கும்பகோணத்திலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன.

< PREV <
காவிரி வடகரை 5வது தலம்
திருநல்லூர்ப்பெருமணம்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 7வது தலம்
(தென்)திருமுல்லைவாயில்