|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருமருகல் கோயில் தலவரலாறு
Sthala puranam of Thirumarugal Temple
இறைவர் திருப்பெயர் : மாணிக்கவண்ணர், இரத்தினகிரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : வண்டுவார் குழலி, ஆமோதாளக நாயகி
தல மரம் : மருகல் (ஒரு வகை வாழை)
தீர்த்தம் : இலட்சுமி தீர்த்தம், மாணிக்க தீர்த்தம்.
வழிபட்டோர் : இலட்சுமி
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. அங்கமும் வேதமும்,
2. சடையா யெனுமால்.
2. அப்பர் - 1. பெருகலாந் தவம் பேதமை.
தல வரலாறு
- தலமரத்தின் பெயரால், இப்பதி வழங்கப்படுகிறது.
விடந்தீண்டி இறந்த காதலனை எண்ணிப் புலம்பிய நங்கையின் குரல்கேட்டுவந்து, அவளுடைய துயரைக் கண்டு, இறந்தவனை உயிர் பெறச் செய்த திருஞானசம்பந்தர், இருவருக்கும் திருமணம் நிகழ்த்திய பதி.
சிறப்புகள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இஃது, மயிலாடுதுறை - பேரளம் இரயில் பாதையில் நன்னிலம் இரயில் நிலையத்திற்குக் கிழக்கே 11-கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.
|