திருமறைக்காடு (வேதாரண்யம் / வேதவனம்)
Sthala puranam of Thirumaraikkadu Temple


இறைவர் திருப்பெயர்	: வேதாரண்யேஸ்வரர், மறைக்காட்டு மணாளர்
இறைவியார் திருப்பெயர்	: யாழைப்பழித்த மொழியாள்
தல மரம்		: வன்னி 
தீர்த்தம்			: வேத தீர்த்தம், கடல்துறை, மணிகர்ணிகை, தேவபூஷணம்
வழிபட்டோர்		: வேதங்கள், இராமர், அகத்தியர், முசுகுந்த சக்கரவர்த்தி, 
			 கௌதமர், விசுவாமித்ரர், வசிஷ்டர், நாரதர், பிரமன், 
			 கங்கை, காவிரி.
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	1. சிலைதனை நடுவிடை, 
					2. சதுரம் மறைதான், 
					3. பொங்கு வெண்மணற்,
					4. கற்பொலிசு ரத்தினெரி, 
					5. விடைத்தவர் புரங்கள். 

			 2. அப்பர்  -	1. இந்திரனோடு தேவர் இருடிகள், 
					2. தேரையு மேல்க டாவி, 
					3. ஓதமால் கடல் பாவி, 
					4. பண்ணின் நேர்மொழி,
					5. தூண்டு சுடரனைய சோதி. 

			3. சுந்தரர் -	1. யாழைப் பழித்தன்னமொழி

thirumaraikkadu temple

தல வரலாறு

 • வேதங்கள் வழிபட்டதால், இப்பெயர் பெற்றது.

 • அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய திருத்தலம்.

 • வேதங்களால் அடைக்கப்பட்டத் திருக்கதவினை, அப்பரடிகள் திறப்பிக்கவும், ஞானசம்பந்தர் திருக்காப்பிடவும் பாடியப் பெருமைப் பெற்றத் தலம்.

 • இராமர், இராவணனை கொன்ற பழி நீங்கப் பூஜித்த தலமாதலால், இஃது கோடிக்கரை என்றும் வழங்கப்படுகிறது.

 • இக்கோவிலில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுவதற்கு வந்த எலி, அணையும் நிலையில் இருந்த திரியைத் தூண்டி, மறு பிறப்பில் மாவலிச் சக்கிரவர்த்தியாகப் பிறந்தது. இச்செய்தியை, அப்பரடிகள் திருக்குறுக்கைத் தல தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 • முசுகுந்தச் சக்கரவர்த்தி தியாகேசப் பெருமானை எழுந்தருளுவித்த ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (தியாகர் - புவனவிடங்கர்; நடனம் - ஹம்ச நடனம்; மேனி - மரகத் திருமேனி; ஆசனம் - இரத்தின சிம்மாசனம்).

சிறப்புகள்

 • திருவிளையாடற் புராணம் அருளிய பரஞ்சோதி முனிவர் அவதாரத் தலம். பரஞ்சோதி முனிவரே இக்கோவில் தலபுராணத்தை அருளிச் செய்துள்ளார்.

 • சோழர், விஜயநகர அரசர் கால, கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இக்கோவில், திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் இரயில்பாதையில் வேதாரண்யம் நிலையத்திலிருந்து மேற்கே 1- கி. மீ. தூரத்தில், உள்ளது. திருத்துறைப்பூண்டி, நாகை ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 124வது
தலம் திருவாய்மூர்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 126வது
தலம் திருஅகத்தியான்பள்ளி