|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருமாந்துறை
இறைவர் திருப்பெயர் : ஆம்ரவனேஸ்வரர், மிருகண்டீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : அழகம்மை, பாலாம்பிகை
தல மரம் : மாமரம் (ஆம்ரம்)
தீர்த்தம் : காயத்ரி நதி
வழிபட்டோர் : சூரியன், சந்திரன், இந்திரன், மருதவானவர்,
மிருகண்டு முனிவர்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - செம்பொனார் தருவேங்கை
தல வரலாறு
மாமரத்தைத் தலமரமாகக் கொண்டதால் இப்பெயர். இறைவரும் ஆம்ரவனேஸ்வரர் (ஆம்ரம்-மாமரம்) எனப்படுகிறார்.
இது, வடகரை மாந்துறையாகும். கும்பகோணம் அருகில் தென்கரை மாந்துறை என்ற வைப்புத்தலம் உள்ளது.
சிறப்புக்கள்
- சோழர் காலக் கல்வெட்டுகள் இரண்டு படி எடுக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, லால்குடி இரயில் நிலையத்திலிருந்து மேற்கில் 5-கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சிராப்பள்ளியிலிருந்தும், லால்குடியிலிருந்தும் பஸ் வசதி உள்ளது.
|