திருக்குறும்பலா (குற்றாலம்)

இறைவர் திருப்பெயர்	: குறும்பலா நாதர்
இறைவியார் திருப்பெயர்	: குழல்வாய் மொழியம்மை
தல மரம்		: குறும்பலா
தீர்த்தம்			: வட அருவி
வழிபட்டோர்		: அகத்தியர்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - திருந்த மதிசூடித்.

தல வரலாறு

  • தல மரம் கோவில் பெயராயிற்று. இஃது, திருக்குற்றாலம் கோவிலினுள் அமைந்த தனிக் கோவிலாகும்; இத்திருக்கோயிலும் திருஞானசம்பந்தர் பெருமானால் பாடல் பெற்றதாகும்.

சிறப்புகள்

  • இது, முதலில் வைணவ கோவிலாக இருந்தது. அவ்வூர் வைணவர்கள், சிவநிந்தையும், சிவனடியார் நிந்தையும் செய்ததால், அகத்தியர் வைணவ அடியார் வேடம் பூண்டு, திருமாலின் தலையில் கை வைத்துச் சிவலிங்கமாக்கினார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இக்கோயில் திருக்குற்றாலம் திருக்கோயில் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது.

திருக்குற்றாலம்

< PREV <
பாண்டி நாட்டு 12வது தலம்
திருச்சுழியல் (திருச்சுழி)
Table of Contents > NEXT >
பாண்டி நாட்டு 14வது
தலம் திருநெல்வேலி