திருக்குரங்கணில்முட்டம் தலபுராணம்

Sthalapuranam of Kuranganilmuttam temple

இறைவர் திருப்பெயர்		: வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: இறையார் வளையம்மை.
தல மரம்			: இலந்தை.
தீர்த்தம்				: காக்கைத்தீர்த்தம் (காக்கைமடு)
வழிபட்டோர்			: வாலி, இந்திரன், எமன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - விழுநீர்மழு வாள்படை.

kuranganilmuttam temple

தல வரலாறு

 • வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும், எமன் முட்டம் (காகம்) வடிவிலும் இறைவனை வழிபட்ட தலம்; ஆதலின் இஃது குரங்கணில்முட்டம் என்ற பெயர் பெறலாயிற்று.

சிறப்புகள்

 • மேற்கு நோக்கிய சந்நிதி.

 • கோயில் வாயிலின் முகப்பில் அணிலும் காகமும் வழிபடும் சிற்பம் உள்ளது.

 • அம்பாள் பெயரை இப்பகுதி மக்கள் 'இளையாளம்மன்' என்று அழைக்கின்றனர்.

 • கோயிலுக்கு சற்றுத் தொலைவில் ஒரு பாறை குடைக் கோயிலாகக் காட்சியளிக்கிறது.

  kuranganilmuttam temple

 • கல்வெட்டில் இத்தலம் 'காலியூர்க் கோட்டத்து இருகழி நாட்டு மாமண்டூர்ப் பற்றத்துப் பல்லவபுரமான குரங்கணில்முட்டம்' எனக் குறிக்கப்படுகிறது. இறைவன் திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார் என்றும், கொய்யாமலர் ஈசுவரதேவர் என்றும் குறிக்கப்படுகிறார்.

 • கல்வெட்டில், சகம் 1451-ல் பூஜைக்காக கிருஷ்ணதேவராயர் பல்லவபுரம் கிராமத்தை இக்கோயிலுக்கு அளித்ததாக குறிப்புள்ளது.

 • இப்பகுதி மக்களிடையே 'கொய்யாமலை' என்னும் பெயர் பலருக்கு இருப்பதை இன்றும் காணலாம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பேருந்து சாலையில் பாலாற்றைத் கடந்து, 'தூசி' என்னும் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து 2-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.

தொடர்பு :

 • 09943295467

< PREV <
தொண்டை நாட்டு 5வது தலம்
திருக்கச்சிநெறிக்காரைக்காடு
Table of Contents > NEXT >
தொண்டை நாட்டு 7வது
தலம் திருமாறகல்