|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருக்குடவாயில்
இறைவர் திருப்பெயர் : கோணேஸ்வரர், சூரியேஸ்வரர், ப்ருகநாதர்
இறைவியார் திருப்பெயர் : பெரிய நாயகி
தல மரம் : வாழை
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
வழிபட்டோர் : கருடன், சூரியன், தாலாப்பிய முனிவர், ப்ருகு முனிவர், திருண பிந்து முனிவர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் (1. திகழும் திருமாலொடு, 2. கலைவாழும்)
தல வரலாறு
- திருணபிந்து முனிவருக்கு இறைவன் குடத்தின் வாயில் வெளிப்பட்டு, குஷ்ட நோயைத் தீர்த்தருளியதால், இப்பெயர் பெற்றது.
- கருடன் பூசித்து, அமுதம் பெற்றுத் தானும், தன் தாயும் சாபம் நீங்கப் பெற்ற தலம். இதனால் திருமதிலின் மேல் கருடன் உருவங்கள் உள்ளன.
சிறப்புக்கள்
- கோச்செங்கணாரின் மாடக் கோயில்.
- அம்மன் கோயில் நிலமட்டத்தில். உள்ளது.
- சோழர்கால கல்வெட்டுகள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணத்திலிருந்து தென் கிழக்கில் 15கீ.மீ. தூரத்தில் இருக்கிறது. திருவாரூர், கும்பகோணம் ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.
|