குடந்தைக்காரோணம்
(சோமேசர் திருக்கோயில்)

இறைவர் திருப்பெயர்		: சோமேசர், சிக்கேசர், சோமநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: சோமசுந்தரி, தேனார் மொழியாள்.
தல மரம்			: வேம்பு
தீர்த்தம்				: சோம தீர்த்தம்.
வழிபட்டோர்			: வியாழன், சந்திரன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - வாரார்கொங்கை மாதோர்பாக.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
தல வரலாறு

  • மகாசங்கார காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்டதலம் காரோணம் எனப்படும்.

  • இக்கோயில் அம்பிகை, இறைவன் திருமேனியை ஆரோகணித்த தலமாதனின் காரோணம் என்றாயிற்று.

  • அமுத கலசம் வைத்திருந்த உறி சிவலிங்கமான தலமிது. எனவே சிக்கேசம் (சிக்கம் - உறி) என்றும் பெயர்.

front appearance of the viSwanAthar temple

சிறப்புகள்

  • இத்தலத்தில் இராமன், இராவணனை கொல்ல ருத்ராம்சம் வேண்டி வழிபட்டு உடலில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் காய - ஆரோகணம் - காரோணம் என்று இஃது பெயர் பெற்றதால், மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ள இக்'காசி விசுவேசம்' என்னும் கோயிலே குடந்தைக் காரோணம் என்றும் சொல்கின்றனர். இக்கோயில் மேற்கு நோக்கிய சந்நிதியாக எழுபத்திரண்டு அடி உயர இராஜகோபுரமும் இரண்டு பிரகாரங்களுடனும் காட்சியளிக்கின்றது. சுவாமி - காசிவிஸ்வநாதர்; அம்பாள் - விசாலாட்சி.

  • திருஞானசம்பந்தர் பாடலில் "தேனார் மொழியாள் திளைத்தங்காடித் திகழும் குடமூக்கில், கானார் நட்டம் உடையார் செல்வக்காரோணத்தாரே" என்று குறிப்பிட்டுள்ளமையால், அம்பிகை பெயர் வழங்கும் தலம் (சக - உமேசம்) சோமேசம் ஆதலின் இதுவே பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது.

  • குடந்தைச் சிவனடியார் திருக்கூட்டத்தினர் இத்திருக்கோயிலையே குடந்தைக் காரோணமாக ஏற்றுக்கொண்டு 1958-ஆம் ஆண்டில் காரோணப் பதிகத்தைக் கல்லில் பொறித்துச் சுவரில் பதித்துள்ளனார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தமிகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு வருவதற்கு பேருந்து வசதி உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 27வது தலம்
திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 29வது
தலம் திருநாகேச்சரம்