திருக்கோவலூர் வீரட்டம்

இறைவர் திருப்பெயர்	: வீரட்டேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்	: சிவானந்தவல்லி, பெரியநாயகி, பிருகந்நாயகி.
தல மரம்		: வில்வம்.
தீர்த்தம்			: தென் பெண்ணையாறு (தட்சிண பிநாகினி).
வழிபட்டோர்      	: மெய்ப்பொருள் நாயனார், நரசிங்கமுனையரையர் (சுந்தரரை வளர்த்தவர்), 
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	படைகொள் கூற்றம்.
			 2. அப்பர்  -	செத்தையேன் சிதம்பநாயேன்.

thirukovalur temple

தல வரலாறு

 • ஊர் பெயர் திருக்கோவலூர்; தலத்தின் பெயர் வீரட்டம்.

 • திருக்கோவலூர் என்பது மருவி இன்று திருக்கோயிலூர் என்று வழங்குகின்றது.

 • இது, அந்தகாசூரனைச் சம்ஹரித்த தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.

சிறப்புகள்

 • மெய்பொருள் நாயனார் அவதரித்து, குறுநில மன்னராக இருந்து ஆட்சி செய்த பதி. நாயனாரின் திருவுருவச் சிலை கோயில் உள்பிரகாரத்தில் உள்ளது.
  	அவதாரத் தலம்	: திருக்கோவலூர்.
  	வழிபாடு		: சங்கம வழிபாட்.
  	முத்தித் தலம் 	: திருக்கோவலூர்.
  	குருபூசை நாள் 	: கார்த்திகை - உத்திரம்
  

 • முதல் இருவர் பாடல் பெற்றத் தலம்.

 • சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்த பெருமையை உடைய நரசிங்கமுனையரையர் அவதரித்தத் தலம். (நரசிங்க முனையரைய நாயனார் வேறு.)

 • திருமுறை கண்ட இராஜராஜ சோழன் அவதரித்த பதி.

 • ஔவையார் இத்தல விநாயகரைப் பூஜித்து, அவரது தும்பிக்கையால் கயிலை அடைந்த பதி.

 • சோழர் காலக் கல்வெட்டுகள் 79 உள்ளன.

அமைவிடம்

	அ/மி. வீரட்டேசுவரர் திருக்கோயில், 
	திருக்கோயிலூர் - 605 757.
	விழுப்புரம் மாவட்டம். 

	தொலைபேசி : 04153 - 224036, +91-93448 79787.

மாநிலம் : தமிழ் நாடு
விழுப்புரம் - திருவண்ணாமலை இரயில் பாதையில் உள்ள நிலையம். நிலையத்திலிருந்து வடக்கே 5-கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடக்கவேண்டும். திருவண்ணாமலை, பண்ணுருட்டி தலங்களிலிருந்து, ஏராளமான பேருந்து வசதி உள்ளது.

< PREV <
நடு நாட்டு 10வது தலம்
திருநெல்வெண்ணெய்
Table of Contents > NEXT >
நடு நாட்டு 12வது தலம்
திருஅறையணிநல்லூர்
(அரகண்ட நல்லூர்)

 • மெய்ப்பொருள் நாயனார் வரலாறு (மூலம்)