திருக்கொட்டையூர் திருக்கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்		: கோடீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: கந்துக கிரீடாம்பாள், பந்தாடுநாயகி.
தல மரம்			: கொட்டை (ஆமணக்கு)ச் செடி.
தீர்த்தம்				: அமுததீர்த்தம்.
வழிபட்டோர்			: மார்க்கண்டேயர்.
தேவாரப் பாடல்கள்		: அப்பர் - கருமணிபோற் கண்டத்
kottaiyur temple kOiyil vimAnam

தல வரலாறு

  • ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் லிங்கம் வெளிப்பட்டதால் இவ்வூர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது.

  • சோழ மன்னனுக்கும், ஏரண்ட முனிவருக்கும் கோடிலிங்கமாகக் காட்சி தந்தமையால் கோடீஸ்வரர் என்று சுவாமிக்கும், கோடீச்சரம் என்று கோயிலுக்கும் பெயர் வரலாயிற்று.

  • மேலும், பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடிமுருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சித் தந்ததாலும் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார்.

sculpture

சிறப்புகள்

  • இத்தலத்தின் வேறு பெயர்கள் வில்வாரண்யம், ஏரண்டபுரம் என்பனவாம்.

  • மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - காய்காய்த்த மாதிரி காணப்படுகிறது.

  • இத்தலத்தில் புண்ணியஞ் செய்தாலும், பாவஞ் செய்தாலும் கோடி மடங்காகப் பெருகும் என்பது ஐதீகம். இங்குப் பாவஞ் செய்தால் கோடி மடங்காகப் பெருகுவதால் அதற்குக் கழுவாயே இல்லாமற் போகும் என்பதை "கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே" என்னும் பழமொழியால் அறியலாம்.

அமைவிடம்

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - திருவையாறு சாலையில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 4-கி. மீ. தொலைவு; நகரப் பேருந்து செல்கிறது. கும்பகோணம் - சுவாமிமலை நகரப் பேருந்து கொட்டையூர் வழியாகச் செல்கிறது.

< PREV <
காவிரி வடகரை 43வது
தலம் திருவியலூர்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 45வது
தலம் இன்னம்பர்