|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருக்கொள்ளிக்காடு (கள்ளிக்காடு) தல வரலாறு
Sthala puranam of Thirukkollikkadu temple
இறைவர் திருப்பெயர் : அக்கினீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : மிருதுபாதநாயகி, பஞ்சின் மெல்லடியம்மை.
தல மரம் : வன்னி.
தீர்த்தம் : தீர்த்தக்குளம்.
வழிபட்டோர் : அக்கினி.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - நிணம்படு சுடலையின் நீறு.
தல வரலாறு
- மக்கள் வழக்கில் 'கள்ளிக்காடு' என்று வழங்குகிறது.
கொள்ளி - நெருப்பு. அக்கினி வழிபட்ட தலமாதலின் 'கொள்ளிக்காடு' என்று பெயர் பெற்றது.
இத்தலத் தேவாரத்தில் இறைவன் யானையை உரித்த செயல் குறிப்பிடப்படுவதால் மக்கள் ஒரு காலத்தில் இக்கோயிலை "கரியுரித்த நாயனார் கோயில்" என்றும் அழைத்து வந்ததாக தெரிகிறது.
சிறப்புகள்
- சோழ மன்னன் ஒருவனுக்கு சனி தோஷம் விலகிய தலமாகும்.
மூலவர் சிவலிங்கத் திருமேனி; சற்று சிவந்த நிறமாகவுள்ளது. (அக்கினி வழிபட்டது.)
இத்தலத்து இறைவனருளால் சனிதோஷம் நீங்கப் பெற்ற திரிபுவனசக்கரவர்த்தி, தானமாகத் தந்த 120 ஏக்கர் நன்செய் (கோயிலை சுற்றி) இன்று கோயில் நிர்வாகத்தில் உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி மெயின்ரோடில், 'நெல்லிக்கா ' என்று கைகாட்டி உள்ள திசையில் சென்று; 'திருநெல்லிக்கா ' - 'தெங்கூர் ' அடைந்து, அங்கிருந்து 'கொள்ளிக்காடு' செல்லும் பாதையில் 5-கி. மீ. சென்று, கீராலத்தூர் கிராமத்தை அடைந்து சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலுள்ள கோயிலை அடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்ல நல்ல சாலை வசதி உள்ளது.
|