திருக்கோளிலி (திருக்குவளை) திருக்கோயில் தலவரலாறு
Sthala puranam of Thirukkolili (Thirukkuvalai) Temple


இறைவர் திருப்பெயர்		: பிரமபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: வண்டமர் பூங்குழலி.
தல மரம்			: தேற்றாமரம்
தீர்த்தம்				: பிரம தீர்த்தம்.
வழிபட்டோர்			: பிரமன், திருமால், இந்திரன், அகத்தியர், முசுகுந்தன், 
				 பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், ஹேமகாந்த 
				 மன்னன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் - 	1. நாளாய போகாமே நஞ்சணியுங்.

				 2. அப்பர்  -	1. மைக்கொள் கண்ணுமை, 
						2. முன்ன மேநினை யாதொழிந். 

				 3. சுந்தரர் - 	1. நீள நினைந்தடி யேனுமை.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
Tirukkolili temple

தல வரலாறு

 • இத்தலம் மக்கள் வழக்கில் "திருக்குவளை" என்று வழங்கப்படுகிறது.

 • நவக்கிரகங்கள் முதலியோர்க்கு உண்டாய குற்றங்களை நீக்கி அருள் புரிந்தமையால் "கோளிலி" என்று பெயர் பெற்றது. "கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்" என்பது ஞானசம்பந்தர் வாக்கு.

 • பகாசூரனைக் கொன்றதனால் உண்டான பாவத்தை (பிரமகத்தித் தோஷம்) வீமன் இங்குப் போக்கிக் கொண்டான் என்பது வரலாறு.

சிறப்புகள்

 • சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்மலையை எடுத்துச் செல்ல ஆள்வேண்டிப் பாடிய சிறப்புக்குரியதாய் விளங்குவது இத்தலம்.

 • இத்தலம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. (அவனி விடங்கத்தலம், பிருங்கநடனம்)

 • இத்தலத்திற்கு பிரமதபோவனம், கதகாரண்யம் (தேற்றாமரவனம்), புஷ்பவனம், தென்கயிலை எனப்பல பெயர்களுண்டு.

 • முன்கோபுரத்தில் பகாசூரன் உருவமும், பிரமகத்தி உருவமும் உள்ளது.

 • சுவாமி, அம்பாள் சந்நிதிக்கு நடுவில் அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.

 • இறைவன் வெண் மணலால் ஆன சிவமூர்த்தமாக காட்சி தருகிறார்.

 • இங்குள்ள நவக்கிரகங்கள் ஒருமுகமாகத் தென்திசையை நோக்கி விளங்குகின்றன.

 • ஆலயத்திற்கு தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) உள்ளார்.

 • இக்கோயிலில் 19 கல்வெட்டுக்கள் - சோழர், பாண்டியர் காலத்தியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 • கல்வெட்டுக்களில் இறைவன் 'திருக்கோளிலி உடைய நாயனார் ' என்றும், தியாகேசர் 'அவனிவிடங்கத் தியாகர் ' என்றும் குறிக்கப்படுகிறார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - எட்டிக்குடி சாலையில் எட்டிக்குடிக்கு முன்னால் உள்ள தலம்; திருவாரூரிலிருந்து 19-கி. மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 122வது
தலம் திருக்கைச்சினம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 124வது
தலம் திருவாய்மூர்