திருக்கொடுங்குன்றம் - (பிரான்மலை)

இறைவர் திருப்பெயர்		: உமாமகேஸ்வரர், மங்கைபாகர். / கொடுங்குன்றநாதர், 
				  கடோரகிரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: தேனாம்பிகை, தேனாம்பாள். / குயிலமுதநாயகி, 
				  அமிர்தேஸ்வரி.
தல மரம்			: உறங்காபுளி, பெயரில்லா மரம் 
தீர்த்தம்				: தேனாழிதீர்த்தம்.
வழிபட்டோர்			: 
தேவாரப் பாடல்கள்		: சம்பந்தர் - வானிற்பொலி வெய்தும்மழை
Kodunkunram temple

தல வரலாறு

  • மலைக்கு கீழே உள்ள கோயிலான கொடுங்குன்றநாதர் சந்நிதியே பாடல் பெற்ற பதி.

  • இக்கோயிலில் மேற்புறம், நடுப்புறம், இடப்புறம் ஆகிய மூன்று அமைப்புகள் சொர்க்கம் - (மங்கைபாகர்), அந்தரம் - (பைரவர்), பூமி - (கடோரகிரீஸ்வரர்) என்று அழைக்கப்பட்டு சுவாமி எழுந்தருளியுள்ளார்.

சிறப்புக்கள்

  • மலை மேலே உள்ள மூலவர் உருவங்கள் கல்யாண கோலத்தில் உள்ளன.

  • மலை மேலே காரணாகம முறையிலும், கீழே காமிகாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன.

  • "பெயரில்லா மரம்" மலைமீது சுவாமி (மங்கைபாகர்) சந்நிதிக்கு அருகில் உள்ளது. இதுகாறும் இம்மரத்தை எவராலும் பெயர் தெரிந்து சொல்லப்படாமையால் "பெயரில்லா மரம்" என்றே அழைக்கின்றனர்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
மதுரை அண்ணா பேருந்து நிலையம் - பொன்னமராவதி சாலையில் உள்ளது இத்தலம். சிங்கம்புணரி மற்றும் மேலூரிலிருந்து பேருந்துகள் உள்ளன.

< PREV <
பாண்டி நாட்டு 4வது
தலம் திருஏடகம்
Table of Contents > NEXT >
பாண்டி நாட்டு 6வது
தலம் திருப்புத்தூர்