திருக்கோடிகா - (திருக்கோடிகாவல்) திருக்கோயில் தல வரலாறு
Sthala puranam of Thirukkodika (Thirukodikkaval) Temple


இறைவர் திருப்பெயர்	: கோடீஸ்வரர், கோடிநாதர்
இறைவியார் திருப்பெயர்	: திரிபுரசுந்தரி,வடிவாம்பிகை
தல மரம்		: 
தீர்த்தம்			: சிருங்க தீர்த்தம்
வழிபட்டோர்		: மூன்று கோடி ரிஷிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	இன்று நன்று. 
			 2. அப்பர்  -	1. நெற்றிமேற் கண்ணினானே, 2. சங்குலா முன், 
					3. கண்டலஞ்சேர்.
thirukodika temple

தல வரலாறு :

 • தற்போது மக்கள் வழக்கில் இத்தலம் திருக்கோடிகாவல் என்று வழங்குகிறது.

 • மூன்று கோடி ரிஷிகள் பூஜித்ததால் இப்பெயர் பெற்றது.

 • சிருங்கோத்பவ தீர்த்தம் நந்தியின் கொம்புகளால் உருவாக்கப்பட்டது.

 • ஜமதக்னி முனிவரின் புதல்வரான பரசுராமருக்கு ஏற்பட்ட மாத்ருஹத்தி தோஷம், ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம், பிரலம்பாசுரனைக் கொன்றதால் பலராமனுக்கு ஏற்பட்ட தோஷம், தட்சயாகத்தில் பலரைக் கொன்றதால் வீரபத்திரருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம், காளிக்கு ஏற்பட்ட மஹாஹத்யா தோஷம் ஆகிய தோஷங்களை நிவர்த்தி செய்த தலம்.

 • ஸ்ரீமன் நாராயணன் இத்தலத்தில் உள்ள சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி, தவமிருந்து மூன்று கோடி தேவதைகளுக்கு முக்தியை வேண்ட அவர்கள் அனைவருக்கும் முக்தி அளித்த தலம்.

 • சிறந்த சிவபக்தரான சுதர்சனன் என்ற வைஷ்ணவ சிறுவன் ஹரதத்தராக மாற திருவருள் கிடைத்த தலம்.

சிறப்புகள்

 • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பெருமக்களால் பாடல் பெற்றத் தலம்.

 • இக்கோவில், திருவிசைப்பாப்பதிகம் பாடிய கண்டராதித்த சோழரது மனைவியாகிய செம்பியன்மாதேவியாரால் கற்றளியாக ஆக்கப் பெற்றது.

 • ஆனி 19, 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் சூரியபகவான் தன் பொற்கரங்களால் இவ்விறைவனை வழிபாடு செய்யும் திருத்தலம்.

 • இத்தல அம்பிகை, மஹானான ஸ்ரீபாஸ்கரராயரை லலிதா சகஸ்ரநாமத்திற்கு தன் சன்னதியிலேயே உரை எழுத அருள்பாலித்த தலம்.

 • சிவபெருமானின் 64 லீலைகளை பல்லவ கால சிற்பங்களில் இத்தலத்தில் காணலாம்.

 • பல்லவர்கள், முத்தரையர்கள், பாண்டியர்கள், சோழர்கள் காலக் கல்வெட்டுகள் மொத்தம் 50 உள்ளன.

அமைவிடம்

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை - கும்பகோணம் இரயில் பாதையில் நரசிங்கன்பேட்டை நிலையத்திலிருந்து வடக்கே 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. காவிரி வடகரை வழியாக மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து பாதையில் இத்தலம் உள்ளது.

தொடர்பு :

 • 09486670043

< PREV <
காவிரி வடகரை 36வது
தலம் கஞ்சனூர்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 38வது
தலம் திருமங்கலக்குடி