திருக்கீழ்வேளுர்

இறைவர் திருப்பெயர்	: அட்சயலிங்கேஸ்வரர், கேடிலியப்பர்
இறைவியார் திருப்பெயர்	: வனமுலை நாயகி, சுந்தர குஜாம்பாள்
தல மரம்		: இலந்தை
தீர்த்தம்			: சரவண தீர்த்தம்
வழிபட்டோர்		: முருகப் பெருமான், அகத்தியர், குபேரன்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் (மின்னுலாவிய சடையினர்),   அப்பர் (ஆளான் அடியவர்)
thirukizvelur temple

தல வரலாறு

    வேள் (முருகப் பெருமான்) வழிபட்டதால், இப் பெயர். அவர் பூஜைக்கு கெடுதி வராது, இறைவியார், துர்க்கையின் அம்சமாக காவல் புரிந்தார்.அவருக்கு அஞ்சு வட்டத்து அம்மை என்று பெயர்.
  • அகத்தியர் கூத்தபெருமானின், வலத் திருவடியைத் தரிசித்த பதி.

சிறப்புக்கள்

    கோச்செங்கணானின் மாடக் கோவில்.
  • மூன்று கல் வெட்டுகளில் இரண்டு சோழர் காலத்தவை,ஒன்று தஞ்சை மராட்டிய மன்னன் காலத்தது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர்-நாகை பாதையில் உள்ள இரயில் நிலையம் கீவளூர். நிலையத்திலிருந்து, வடக்கே 2கீ.மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து பஸ் வசதி உள்ளது.

< PREV <
காவிரி தென்கரை 83வது தலம்
சிக்கல்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 85வது தலம்
தேவூர்