திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு)

இறைவர் திருப்பெயர்	: குற்றம் பொறுத்த நாதர்
இறைவியார் திருப்பெயர்	: கோல்வளை நாயகி
தல மரம்		: கொகுடி முல்லை
தீர்த்தம்			: இந்திர தீர்த்தம்
வழிபட்டோர்		: வசிஷ்டர், ஆஞ்சநேயர், இந்திரன்
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் ( சுற்றமொடு ), சுந்தரர் பாடல் பெற்றது.
karuppariyalur temple

தல வரலாறு

  • கொகுடி முல்லையைத் தலக்கொடியாக கொண்டதால் இப் பெயர் பெற்றது.(கருப்பறியலூர் என்பது ஊரின் பெயர். கோயிலின் பெயர் கொகுடிக்கோயில்).
  • இறுமாப்புடன் இருந்த இந்திரன், முன் கயிலையில் இறைவர் பூத உருவத்துடன் தோன்றினார். அதனை அறியாத இந்திரன் வச்சிராயுதத்தை அவர் மேல் எறிந்தான். பின் தன் பிழையை உணர்ந்து பொறுக்கவேண்டியதால், இவ்வூர் இறைவன் பெயர் குற்றம் பொறுத்த நாதர் என்றாயிற்று,

சிறப்புக்கள்

  • இக்கோயிலில் சீர்காழி மலைக் கோயிலில் உள்ளது போல் அம்மையப்பரும், சட்டைநாதர் திருவுருவமும் உள்ளது,
  • இதனை, மேலைக்காழி எனவும் கூறுவர்.
  • சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது வைத்தீசுவரன்கோயில் இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 8கீ.மீ தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை,வைதீஸ்வரன்கோயில் ஆகிய இடங்களிலிருந்து தலைஞாயிறு (இத்தலத்தின் இன்றைய பெயர்) செல்ல பஸ்வசதி உள்ளது.

< PREV <
காவிரி வடகரை 26வது தலம்
திருக்குறுக்கை
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 28வது தலம்
குரக்குக்கா