கன்றாப்பூர்
(கோயில்கண்ணாப்பூர்)

இறைவர் திருப்பெயர்		: வஸ்ததம்பபுரீஸ்வரர், நடுதறியப்பர், நடுதறிநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: ஸ்ரீ வல்லிநாயகி, மாதுமையம்மை
தல மரம்			: கல்பனை (பனை மரத்தில் ஒருவகை - தற்போதில்லை.)
தீர்த்தம்				: சிவகங்கை.
வழிபட்டோர்			: இடும்பன்.
தேவாரப் பாடல்கள்		: அப்பர் - மாதினையோர் கூறுகந்தாய்.

ஸ்தல புராணம் -

Get the Flash Player to see this player.
Kanrappur temple

தல வரலாறு

  • சைவப் பெண் ஒருத்தி வைணவன் ஒருவனுக்கு மனைவியாகி, மாமியார் வீட்டார் காணாதவாறு சிவலிங்க வழிபாடு செய்ய, கணவன் அது கண்டு அவ்லிங்கத்தைக் கிணற்றில் எறிந்து விட, அப்பெண் வேறுவழியின்றி கன்று கட்டியிருந்த முளை (ஆப்பு)யையே சிவபெருமானாகப் பாவித்து வழிபட; ஒரு நாள் கணவன் அதையும் கண்டு, கோபித்து அம்முளையைக் கோடரியால் வெட்ட இறைவன் வெளிப்பட்டு அருள்புரிந்த தலம். (கன்று + ஆப்பு + ஊர் = கன்றாப்பூர்).

சிறப்புகள்

  • இங்குள்ள நால்வர்களுள் இருவர் சம்பந்தராகவும், இருவர் அப்பராகவும் காட்சி தருகின்றனர். (மற்றிருவர் இல்லை)

  • மூலவர் - பாணத்தில் (தலவரலாற்றுக் கேற்ப) வெட்டிய தழும்புள்ளது; சதுர பீடம்.

  • இவ்வூரில் உள்ள எல்லா நிலங்களும் அ/மி. நடுதறிநாதர் பெயரிலேயே பட்டாவாக உள்ளன. தனிப்பட்ட எவருக்கும் சொந்தமாக வேறு பட்டா நிலங்கள் இல்லையாம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
(1) நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் வருவோர் சாட்டியக்குடி வந்து, அக்கூட்டுரோடில் பிரியும் சாலையில் 2 கி. மீ. சென்று, ஆதமங்கலம் தாண்டி, "கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு" என்று கேட்டு அவ்விடத்தில் வலப்புறமாக பிரியும் உள்சாலையில் 1 கி. மீ. சென்றால் தலத்தையடையலாம். (2) திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் வருவோர் மாவூர் கூட்டுரோடு வந்து அங்குப் பிரியும் சாலையில் மருதூர் வந்து, அதற்கு அடுத்துள்ள "கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு" என்று கேட்டு அவ்விடத்தையடைந்து அங்கு (இடப்புறமாக) பிரியும் உள்சாலையில் 1 கி. மீ. சென்றால் தலத்தையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். (கீழ கண்ணாப்பூர் என்று ஊர் ஒன்றுள்ளது; தலம் அதுவன்று. எனவே, "கோயில் கண்ணாப்பூர் " என்று கேட்க வேண்டும்.)

< PREV <
காவிரி தென்கரை 119வது
தலம் திருக்காறாயில்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 121வது
தலம் திருவலிவலம்