|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருக்கண்ணார்கோயில் (குறுமாணக்குடி)
இறைவர் திருப்பெயர் : கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர்,
சஹஸ்ரநேத்ரேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : முருகுவளர்கோதை, சுகந்தகுந்தளாம்பிகை
தல மரம் : சரக்கொன்றை
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்
வழிபட்டோர் : இந்திரன்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் தண்ணார் திங்கட் பொங்கர
தல வரலாறு :
சிறப்புக்கள் :
மூலவர் - சுயம்பு திருமேனி; சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன.
திருமணமாகாதோர் இங்கு வந்து சுவாமிக்கு மாலை சார்த்தி வழிபடுதலும், அவ்வாறு வழிபட்டோர் திருமணத்திற்கு பிறகும் இங்கு வந்து மாலை சார்த்துதலும் மரபாக உள்ளது.
அமைவிடம்
இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
வைத்தீஸ்வரன் கோயில் - மயிலாடுதுறை பேருந்துப் பாதையில் 'பாகசாலை' என்னும் கைகாட்டி உள்ள இடத்தில் அதுகாட்டும் வழியில் (இடப்பக்கமாக) 3 கி.மீ.
சென்றால் 'கண்ணாயிரமுடையார் கோயில் ' என்னும் இத்திருக்கண்ணார் கோயிலை அடையலாம். பேருந்து வசதி உள்ளது.
|