|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருக்கடவூர் மயானம் - (திருமெய்ஞ்ஞானம்)
இறைவர் திருப்பெயர் : பிரம்மபுரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : மலர்க்குழல் மின்னம்மை
தல மரம் :
தீர்த்தம் : காசி தீர்த்தம்
வழிபட்டோர் : பிரமன், மார்க்கண்டேயர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் (வரிய மறையார் பிறையார்),
அப்பர் (குழைகொள் காதினர்),
சுந்தரர்.
தல வரலாறு
- இறைவன், பிரமனை ஒரு கல்பத்தில் எரித்து, நீராக்கி, மீண்டும் உயிர்ப்பித்துப் படைப்புத் தொழிலை அருளிய தலமாதலின் இப் பெயர் பெற்றது.
- எமவாதனையைக் கடத்தற்குரிய ஊர்.
சிறப்புக்கள்
- இத் தலத்தின் காசித் தீர்த்ததிலிருந்துதான் திருக் கடவூர் வீரட்டானேச்சுவரருக்கு நாள்தோறும் திருமஞ்சன நீர் கொண்டு வரப்படுகிறது.
- இவ் வூரில் உள்ள 16 கல்வெட்டுகளில் ,15 பிற்கால சோழர்கள், ஒன்று பாண்டிய மன்னன் கல்வெட்டுகள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மிகப் புகழ் பெற்ற திருக்கடையூருக்குக் கிழக்கே 2கீ.மீ தூரத்தில் உள்ளது.
|