கடம்பந்துறை
(கடம்பர் கோயில், குழித்தலை - குளித்தலை)

இறைவர் திருப்பெயர்		: கடம்பவனேஸ்வரர், கடம்பவனநாதர்.
இறைவியார் திருப்பெயர்		: பாலகுஜாம்பாள், முற்றிலாமுலையாள்.
தல மரம்			: கடம்பு.
தீர்த்தம்				: காவிரி.
வழிபட்டோர்			: 
தேவாரப் பாடல்கள்		: அப்பர் - முற்றி லாமுலை யாளிவ
தலப் பாடல்கள்			: கடம்பர் உலா
kadambandturai temple

தல வரலாறு

  • தற்போது மக்கள் வழக்கில் குழித்தலை, குளித்தலை என வழங்கப்படுகிறது. கல்வெட்டில் இவ்வூர் 'குளிர் தண்டலை ' என்று காணப்படுகிறது.

  • கண்வ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம்.

  • சப்தகன்னிகைகளின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலம்.

சிறப்புகள்

  • சப்தகன்னிகைகளின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலமாதலின், மூலவர் பின்னால் சப்தகன்னிகைகளின் உருவங்கள் கல்லில் பிம்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

  • இங்கு விநாயகப் பெருமான் இடம்மாறி, மறுகோயில் உள்ளார்.

  • இத்திருக்கோயிலில் இரு நடராஜ வடிவங்கள் உள்ளன. ஒன்றில் முயலகன் இருக்க, மற்றொன்றில் இல்லை.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருச்சி ஈரோடு பாதையில் உள்ளது இத்தலம். இது புகைவண்டி நிலையமும் கூட.

தொடர்பு :

  • 04323 - 225228

< PREV <
காவிரி தென்கரை 1வது
தலம் திருவாட்போக்கி
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 3வது
தலம் திருப்பராய்த்துறை