திருப்பாதிரிப்புலியூர்
(திருப்பாப்புலியூர் / கடலூர்)

இறைவர் திருப்பெயர்	: தோன்றாத்துணைநாதர், பாடலீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: பெரியநாயகி அம்மை, கோதைநாயகி
தல மரம்		: பாதிரி (வடமொழி-பாடலம்)
தீர்த்தம்			: கெடில நதி, சிவகர தீர்த்தம், பிரம தீர்த்தம்(கடல்)
வழிபட்டோர்		: வியாக்ரபாதர், உபமன்யு முனிவர், அகத்தியர், 
			  கங்கை, அக்னி, மங்கண முனிவர்
தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் -	முன்னம்நின்ற முடக்கால். 
			  2. அப்பர்   -	ஈன்றாளு மாயெனக்.

patirippuliyur temple

தல வரலாறு

  • பாதிரியைத் தலமரமாகக் கொண்டதாலும், புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்) வழிபட்டதாலும் (பாதிரி+புலியூர்), இப்பெயர் பெற்றது.

  • கல்லால் பிணைக்கப்பெற்றுக் கடலில் எறியப்பெற்ற அப்பர் சுவாமிகள், "சொற்றுணை வேதியன்" என்ற பதிகம் பாடிக் கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையடைந்த தலம். தற்போது,இது கரையேறவிட்ட குப்பம், வண்டிப்பாளையம் எனப்படுகிறது.

  • மங்கண முனிவர், பூசித்து, தான் பெற்ற முயல் வடிவ சாபம் நீங்கப்பெற்றத் தலம்.

சிறப்புகள்

  • சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும், தொல்காப்பியர் இயற்றிய கலம்பகமும் இருக்கின்றன.

  • இத்தலத்தில், திருக் கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவமடம் உள்ளது.

  • சோழர் காலக் கல்வெட்டுகள் 19ம், மற்றது இரண்டும் படி எடுக்கப்பட்டுள்ளன.

patirippuliyur temple

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, தற்பொழுது, கடலூர் எனப்படுகிறது. கோவில், திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்திற்கு அருகே உள்ளது. தமிழகத்தின் அனைத்து நகரங்களிருந்தும் கடலூருக்குப் பஸ் வசதி உள்ளது.

தொடர்பு :

  • 04142 - 236728

< PREV <
நடு நாட்டு 17வது தலம்
திருமாணிக்குழி
Table of Contents > NEXT >
நடு நாட்டு 19வது தலம்
திருமுண்டீச்சுரம்