|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்திலுள்ள கோயில்
Tirukkachinerikkaraikkadu Temple sthala puranam
இறைவர் திருப்பெயர் : சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : (இத்தலத்திற்குரிய உற்சவ அம்பாளாக) பிரமராம்பிகை.
தல மரம் : காரைச்செடி.
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்.
வழிபட்டோர் : இந்திரன், புதன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - வாரணவு முலைமங்கை.
தல வரலாறு
இக்கோயில் ஊருக்குச் சற்றுத் தள்ளி 'திருக்காலிமேடு' என்ற பகுதில் உள்ளது.
ஒரு காலத்தில் இப்பகுதியே காஞ்சிக்கு வரும் வழியாக அமைந்திருந்ததாலும், இப்பகுதி காரை(முட்) செடிகள் நிரம்பியிருந்ததாலும் கச்சிநெறிக், "காரைக்காடு" என்று பெயர் பெற்றது.
- இறைவன் - சத்தியவிரதேஸ்வரர்; இப்பெயரையொட்டியே காஞ்சிக்கு 'சத்தியவிரதக்ஷேத்திரம்' என்ற பெயருண்டாயிற்று.
இப்பகுதியில் வேப்பமரங்கள் அடர்ந்திருந்தமையால் இங்குள்ள தீர்த்தம் மக்களால் வேப்பங்குளம் என்றழைக்கப்படுகிறது. இப்பெயரில் உள்ள "பெரிய வேப்பங்குளம் என்பதே பண்டைய இந்திர தீர்த்தமாகும்."
சிறப்புகள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இரயில்வே ரோடில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்திற்கு எதிரில் திருக்காலிமேட்டிற்குச் செல்லும் பாதையில் சென்று இக்கோயிலை அடையலாம். பேருந்து வசதி உள்ளது.
பாடல்பெற்றத் தலங்களைத் தொடர்ந்து செல்ல : -
காஞ்சிபுரத் தலங்களைத் தொடர்ந்து செல்ல : -
|